தாதிய தினத்தில் சிறந்த சேவைக்கான பாராட்டை பெற்றனர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள்!
உலக தாதிய தினம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் (12) கொண்டாடப்பட்டது.மேலும் ஒரு வார காலமாக பல சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்று வந்துள்ளது. இதில் இரத்த தான நிகழ்வும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும்.இந்நிகழ்வுகள் யாவும் தாதிய பரிபாலகர் திரு சசிதரன் அவர்களின் முழு பொறுப்பிலும், தலைமையிலும் நடைபெற்றுள்ளது. நேற்றைய நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களும்,சிறப்பு அதிதிகளாக கலாநிதி சங்கரப்பிள்ளை சுஜேந்திரன்பேராசிரியர் ( சுகாதார விஞ்ஞானபீடம் கிழக்கு பல்கலைக்கழகம்) அவர்களும், […]