பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய உற்சவம்: கல்முனைப் பகுதியில் மதுபான சாலைகளை மூட உத்தரவு!
சௌவியதாசன். கல்முனை, பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்தைச் சூழவுள்ள பகுதியில் அமைந்துள்ள அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து மதுபான சாலைகளையும் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026 செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் 2026 செப்டம்பர் 25 ஆம் திகதி வரை (வனவாசம், தவநிலை மற்றும் தீப்பாய்தல் ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்கள்) கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மதுபான சாலைகள் […]