September 22, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய உற்சவம்: கல்முனைப் பகுதியில் மதுபான சாலைகளை மூட உத்தரவு!

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய உற்சவம்: கல்முனைப் பகுதியில் மதுபான சாலைகளை மூட உத்தரவு!

​சௌவியதாசன்.

​கல்முனை, பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்தைச் சூழவுள்ள பகுதியில் அமைந்துள்ள அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து மதுபான சாலைகளையும் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.


​இதன்படி, 2026 செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் 2026 செப்டம்பர் 25 ஆம் திகதி வரை (வனவாசம், தவநிலை மற்றும் தீப்பாய்தல் ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்கள்) கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மதுபான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.


​கல்முனை வடக்கு பிரதேச செயலாளரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலனைக் கருத்திற் கொண்டு இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. என். ஏ. பேமரத்ன அவர்களினால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *