September 30, 2026

Blog Post

Kalmunai Net > 2026

சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை ;  கண்டறிந்து தருமாறு குடும்பத்தினர் கண்ணீர் வேண்டுகோள்

பாறுக் ஷிஹான் – தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த சில மாதங்களாகக் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். வழமை போல் வேலைக்குச் சென்ற நிலையிலேயே இவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவரைப் பற்றி இதுவரை எவ்விதத் தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், அவரது மனைவியும் பிள்ளைகளும் சோகத்தில் மூழ்கியுள்ளதுடன் இவரைத் தீவிரமாகத் தேடி […]

Read More

அனோஜனின் விடுதலைக்காக அக்கரைப்பற்றில் ஒன்று கூடிய ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள்.

செல்வி வினாயகமூர்த்தி) – கிரிஷாந் மகாதேவன் – சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்த விசேட நிகழ்வொன்று அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற முன்றலில் இன்று (23) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட ஆலயங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அனோஜனின் விடுதலைக்காக ஒருமித்த குரல் எழுப்பினர். இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதிநிதிகள், மனிதாபிமான […]

Read More

மத்தியமுகாம் உஸ்வா அஹதிய்யா மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு மற்றும் கலாசார நிகழ்வு.

(மின்மினி மின்ஹா) அம்பாரை மாவட்டம் மத்தியமுகாம் பிரதேசத்தில் சிறப்பாக இயங்கிவரும் உஸ்வா அஹதிய்யா மாணவர்களின் வருடாந்த பரிகளிப்பு நிகழ்வு மற்றும் கலாசார நிகழ்வு மத்தியமுகாம் ஜீ.எம்.எம்.எஸ். பாடசுலை மண்டபத்தில் வெற்றிகரமாக (20) நடைபெற்றது. உஸ்வா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் – அஷ்- ஷெய் கு எம். எம். தெளபீக் (இஸ்லாஹி, BA, JP, DO) தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் , அவர்களின் திறமைகளை பராட்டும் வண்ணம் புரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றன. […]

Read More

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நடந்த சோகம்!

ஆடை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்குண்டு பல்கலைக்கழக மாணவி பரிதாபப் பலி பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 வயதுடைய திருமணமான மாணவி   உயிரிழந்துள்ளார். நிந்தவூர் 9 ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார். தனது தந்தையுடன்   மோட்டார் சைக்கிளில் […]

Read More

அனோஜனின் மரண தண்டனையைக் குறைத்து, கருணை வழங்கவும்;கனடா-கல்முனை பிராந்திய இணையம் மனிதாபிமான வேண்டுகோள்-கனடாவிலிருந்து சவூதிக்கு நேரடி அஞ்சல் 

( வி.ரி.சகாதேவராஜா – சௌவியதாசன்) சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கல்முனை நற்பிட்டிமுனை தமிழ் இளைஞர் சிவராசா அனோஜனின் மரண தண்டனையைக் குறைத்து, கருணை வழங்க வேண்டும் எனகனடா கல்முனை பிராந்திய இணையம் மனிதாபிமான வேண்டுகோளை சவூதி மன்னருக்கு கனடா சவூதி தூதரகம் ஊடாக  விடுத்துள்ளது. கனடா கல்முனை பிராந்திய இணைய தலைவர் விசு கணபதிப்பிள்ளை, செயலாளர் பத்மநாதன்,பிரதான ஒருங்கிணை;ப்பாளர் நோ.விஜயரெட்ணம் ஆகியோர் இந்த அஞ்சலை இணையம் சார்பாக அனுப்பி வைத்துள்ளார்கள் அதன் முழு விபரம் இதோ.. அஞ்சல்  […]

Read More

ஒக்டோபர் 03ல் ஆலையடிவேம்பில் கவியரங்கு; ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்.

(செல்வி வினாயகமூர்த்தி) ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார அதிகாரசபையின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் 03ம்திகதி நடைபெறவுள்ள கவியரங்கிற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (22) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச நெசவு நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஓய்வூதியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கலாசார அதிகாரசபையின் பொதுக்கூட்டத்தின் போதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. கலாசார அதிகாரசபையின் உப தலைவர் வா. குணாளன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, ஒக்டோபர் முற்பகுதியில் நடைபெறவுள்ள கவியரங்கை சிறப்பாக முன்னெடுப்பதற்கான […]

Read More

சம்மாந்துறை போக்குவரத்து பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடை

தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.ஆர். விஜேவர்த்ன தற்காலிக இடமாற்றம் பெற்று செல்லவுள்ளதை முன்னிட்டு, அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (22) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப்குமார தலைமையில் நடைபெற்றது. இதன் போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப்குமார கருத்து தெரிவிக்கையில் “சம்மாந்துறையில் கடமையாற்றிய காலப்பகுதியில், வீதி ஒழுங்குகளைப் பேணுதல், போக்குவரத்து […]

Read More

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் குற்றவாளிகளுக்கு15 பேருக்கு தலா 200 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை

உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு தலா 200 ஆண்டுகளுக்கு மேல் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய சிறப்பு நீதிபதிகள் ஆயம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கில், 15 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, […]

Read More

“வளமான நாடு – அழகான வாழ்வு” : சம்மாந்துறை பிரதேச சபையில் உள்ளூராட்சி வார நிறைவு நிகழ்வு

நூருல் ஹுதா உமர் “வளமான நாடு – அழகான வாழ்வு” எனும் தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி நாள் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா, பிரதேச சபை உப தவிசாளர் வீ. வினோகாந்த், பிரதேச சபை செயலாளர் […]

Read More

அனோஜனின் விடுதலைக்காக காரைதீவில் இறைமன்றாட்டம்!

(வி.ரி.சகாதேவராஜா) சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தியும், அவருக்காக இறைமன்றாட்டம் மேற்கொள்ளும் வகையிலும்  பிரார்த்தனை செய்யும் நிகழ்வொன்று காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில், இன்று (22) செவ்வாய்க்கிழமை மாலை உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 2001 ஆம் ஆண்டு சாதாரண தரப் பிரிவு மற்றும் 2004 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு (JALU) கழக நண்பர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர். இதன்போது மக்கள் பிரதிநிதிகள் ஆலய பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், நண்பர்கள், […]

Read More