October 1, 2026

Blog Post

Kalmunai Net > 2026

பண்பாட்டு கலாச்சார பேரணியுடன் நடைபெற்ற திருக்கோவில் வலய மட்ட தமிழ் மொழி தினப் போட்டி!

(வி.ரி.சகாதேவராஜா) அகில இலங்கை தமிழ் மொழித் தினத்தையொட்டிய திருக்கோவில் வலய மட்ட போட்டிகள் நேற்று  (23) சனிக்கிழமை பல பண்பாட்டு கலாச்சார பாரம்பரிய பேரணியுடன் தம்பிலுவில்  மத்திய கல்லூரியில்  நடைபெற்றன.  முன்னதாக,  திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து சுவாமி விபுலாநந்தர் , சேர சோழ பாண்டியர் ,திருவள்ளுவர், ஔவையார், தனிநாயகம் அடிகளார், தமிழ்த்தாய் உள்ளிட்ட பல பண்பாட்டு கலை அம்சங்களுடன் கூடிய பாரம்பரிய நிகழ்ச்சிகள் அடங்கிய பேரணி தம்பிலுவில் மத்திய கல்லூரி வரை சிறப்பாக நடைபெற்றது. பல […]

Read More

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்? இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் தீவிரம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Donald Trump, “ஒப்பந்தத்தின் பெரும்பாலான அம்சங்கள் பேசி முடிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக 60 நாள் போர்நிறுத்தம், Hormuz நீரிணை மீள திறப்பு, ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு தளர்வுகள் மற்றும் அணு திட்டம் தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகள் இடம்பெறலாம் என […]

Read More

ஊடக முதிசொம் ஏ.எல்.எம். சலீம் நினைவு நூல் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வைப்பு

கிழக்கின் ஊடக முதிசொம் ஏ.எல்.எம். சலீம் அவர்களை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்ட ஊடக முதிசொம் நூலின் பிரதியை இந் நூலின் தொகுப்பாசிரியரான மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று தகைசார் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாவிடம் கையளிப்பதையும் (22.05.2026) அருகில் ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன் ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான அ.சுகுமார் க.நல்லதம்பி ஓய்வு பெற்ற கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் மு.சச்சிதானந்தம் ஆகியோர் உள்ளதை படத்தில் காண்க. படம்: செல்லையா பேரின்பராசா 

Read More

காரைதீவில் கல்முனை வலய மட்ட தமிழ் மொழி தினப் போட்டி 

( வி.ரி.சகாதேவராஜா) அகில இலங்கை தமிழ் மொழித் தினத்தையொட்டிய கல்முனை வலய மட்ட போட்டிகள் நேற்று  (23) சனிக்கிழமை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில்  நடைபெற்றன.  அங்குரார்ப்பண நிகழ்வு விபுலானந்தர் அரங்கிலே தமிழ் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் யூஎல்.றியாஸ் தலைமையில்  நடைபெற்றது. கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் பிரதி, உதவி கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் நடுவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகம் கலந்து சிறப்பித்தது. அங்கு, அடுத்த வருடம் […]

Read More

சந்தேக நபர்கள் இருவர் போதைப்பொருளுடன் கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்

பாறுக் ஷிஹான் இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. குறித்த தகவலுக்கமைய சனிக்கிழமை(23) மாலை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக தலைமையிலான பொலிசார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சாய்ந்தமருது-14 […]

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டுப் போட்டி : JKMO (Power Star) அணி சம்பியன்!

2026ஆம் ஆண்டிற்கான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில், JKMO (Power Star) அணி கல்முனை பிராந்தியத்திலேயே முதலிடத்தைப் பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்காக ஆக உழைத்த வீரர், வீராங்கனைகளுக்கும், அணியை சிறப்பாக வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்படுகின்றன.

Read More

காப்பியநாயகி  கற்புக்கரசி கண்ணகைத்தாயின்  வைகாசி திருச்சடங்கு – கட்டுரை – வி. ரி. சகாதேவராஜா

காப்பியநாயகி  கற்புக்கரசி கண்ணகைத்தாயின்  வைகாசி திருச்சடங்கு வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க, குழல்நய ஓசையெழுப்ப, வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமை.   கிழக்கில் பெரும்பாலான தமிழ்க்கிராமங்கள் இச்சடங்கினால் களைகட்டும். நாளை (25) திங்கட்கிழமை இவ்வைகாசித்திருவிழாச்சடங்கு பெரும்பாலான கண்ணகி ஆலயங்களில் ஆரம்பமாகிறது. ( சில இடங்களில் நாள்கள் மாறுபடலாம்)  வடக்கில் வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்திலும் இச்சடங்கு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து, பாண்டியநாட்டிலே அரசியல் புரட்சி செய்து, சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் […]

Read More

சிடாஸ்-கனடா அமைப்பின் 21ஆவது ஆண்டு நிறைவு விழாவும் ஒன்றுகூடலும் செப்டம்பரில்!

கிழக்கு இலங்கைச் சிறுவர் அபிவிருத்திச் சங்கத்தின் (ChiDAES-Canada) 21ஆவது ஆண்டு நிறைவு விழாவும், 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இவ்விழா வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு, கனடா நோர்த் யார்க்கில் (North York) அமைந்துள்ள ‘சர்ச் ஒப் செயின்ட் ஸ்டீபன்’ (Church of St. Stephen – 2259 Jane Street, North York, ON M3M 1A6) மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” […]

Read More

அமெரிக்கா மீண்டும் தாக்குதலுக்கு தயாரா? மேற்கு வான்வெளியை மூடிய ஈரான்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா புதிய ராணுவ நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் பின்னணியில், ஈரான் தனது நாட்டின் மேற்குப் பகுதி வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள NOTAM அறிவிப்பின் படி, மேற்கு வான் எல்லை வழியாகச் செல்லும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Read More

சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெறும் எம்.கே. சிவாஜிலிங்கத்தை சந்தித்த அமைச்சர் சந்திரசேகரன்

சிறுநீரகப் பாதிப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M. K. சிவாஜிலிங்கம் அவர்களின் இல்லத்திற்கு, அமைச்சர் S. சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் S. ரஜீவன் ஆகியோர் இன்று (23) மாலை நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்ததுடன், ஆறுதலும் தெரிவித்தனர்.

Read More