டிக்கோயா இரட்டை கொலை: சந்தேகநபர் தடயவியல் வைத்திய அதிகாரியிடம் ஒப்படைப்பு – வயோதிப தம்பதியினரின் உடல் கண்ணீரஞ்சலியுடன் நல்லடக்கம்
ஹட்டன் டிக்கோயா நகரில் இடம்பெற்ற அதிர்ச்சி அளித்த இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, தடயவியல் வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். டிக்கோயா பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்துடன் இணைந்த குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (21) வயோதிப தம்பதியினர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொகவந்தலாவை பெற்றோசோ பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேகநபர் பொதுமக்களின் தகவலின் பேரில் சனிக்கிழமை (23) மாலை கைது […]