October 1, 2026

Blog Post

Kalmunai Net > 2026

துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய ஊர்காவல் நிகழ்வு

செல்லையா பேரின்பராசா வரலாற்று சிறப்பு மிக்க துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய உற்சவத்தின் விசேட நிகழ்வுகளில் ஒன்றான ஊர்காவல் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. இவ் ஆலய பிரதம பூசகர் சிவத்திரு க.ஜமுனாகரன் உதவி பூசகர் த.சசிகரன் ஆகியோர் ஊர்காவல் நிகழ்வு பூசைகளை நடாத்தினர், இந் நிகழ்வில் பல கலாசார நடனங்களும் இடம்பெற்றது.

Read More

“பச்சை கட்டல்” என்றால் என்ன? கண்ணகி அம்மன் சடங்கில் பக்தியும் பகிர்வும் கலந்த பாரம்பரியம் – வி.ரி.சகாதேவராஜா

கண்ணகி அம்மன் வழிபாடு தமிழர் பாரம்பரியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக கிராமிய ஆலய மரபுகளில் இடம்பெறும் பல்வேறு சடங்குகள் சமூக ஒற்றுமையையும் பக்திப் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக “பச்சை கட்டல்” எனப்படும் மரபுச் சடங்கு காணப்படுகிறது. பச்சை கட்டல் என்பது பொதுவாக கண்ணகி அம்மன் சடங்கு நாட்களில் இடம்பெறும் ஒரு நேர்த்தி மற்றும் பகிர்வு சார்ந்த சடங்காகும்.  மேலும், பச்சைக் கட்டல் நிகழ்வு என்பது குறிப்பாக காரைதீவு கண்ணகையம்மன் ஆலயத்தில் சிறப்பாக 5 […]

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலக வைகாசி பௌர்ணமி கலை விழா விமர்சையாக நடைபெற்றது!

கல்முனை:கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய “வைகாசி மாத பௌர்ணமி கலை விழா – 2026” நிகழ்வு, கடந்த 30.05.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஸ்ரீ பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. தி. ஜே. அதிசயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. நிகழ்ச்சி நிரல் […]

Read More

நள்ளிரவு (30) முதல் அமுல்: எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்வு

இன்று (30.05.2026) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், லங்கா சுப்பர் டீசலின் விலை 20 ரூபாவால் உயர்த்தப்பட்டு 478 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 25 […]

Read More

பெரிய நீலவணை விசேட அதிரடிப்படையினரின் வெசாக் தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன

செளவியதாசன் பௌத்த மதத்தின் முக்கிய புனித தினங்களில் ஒன்றான வெசாக் தினத்தை முன்னிட்டு, பெரிய நீலவணை விசேட அதிரடிப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெசாக் தின கொண்டாட்டங்கள் இன்று சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அழகிய வெசாக் தோரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு வர்ண வானவேடிக்கைகளும் பொதுமக்களின் பார்வைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், வருகை தரும் மக்களுக்காக ஐஸ்கிரீம் தன்சல் உள்ளிட்ட பல்வேறு தான நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வுகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் […]

Read More

மட்டக்களப்பில் விடுதி தீ விபத்து : இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு – தந்தை கைது: வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பிள்ளைகளின் தந்தை எனக் கூறப்படும் நபர் நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் முதற்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உயிரிழந்த குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் உள்ளது என கூறி போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி, குழந்தைகளை வைத்து யாசகம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் […]

Read More

ஹோர்முஸ் நீரிணையில் மறியல் நீக்கம்; உலக கப்பல் போக்குவரத்துக்கு டிரம்ப் வேண்டுகோள்!

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, ஹோர்முஸ் நீரிணையில் அமுல்படுத்தப்பட்டிருந்த கடற்படை மறியல் “இப்போது நீக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும், உலகின் முக்கியமான வர்த்தக கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக இரு திசைகளிலும் கப்பல் போக்குவரத்து உடனடியாக எந்தத் தடையும் இன்றி மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read More

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா பணியக நிதி மோசடி வழக்கு பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதி மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளுக்காக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டதாக […]

Read More

கண்ணகியா? கண்ணகையா? – விளக்கமளிக்கிறார் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா

வைகாசி பிறந்து விட்டால் கண்ணகி அம்மன் வழிபாடு  களைகட்டும். இந்த வேளையில் பலரும் வினவுவது கண்ணகி அம்மனா? கண்ணகை அம்மனா?  இருவேறு பதங்கள் பாவிக்கப் படுகின்றன. எனவே இத் தெய்வத்தை எவ்வாறு அழைப்பது? சில இடங்களிலே கண்ணகி என்று குறிப்பிடுகிறார்கள். சில இடங்களில் கண்ணகை என்று குறிப்பிடுகிறார்கள்.  ஒரே ஆலயத்திலேயே இந்த இரண்டு சொற்பதங்களும் பதாகைகளிலும் ,  தோரணங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது . இதன் விளக்கம் என்ன? எது சரி? எது பிழை ?என்று பலரும் கேட்டார்கள் . […]

Read More

யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்கள் முள்ளிவாய்க்காலில்; ஞாயிறு வற்றாப்பளையில்! 

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் – கதிர்காமம் பாதயாத்திரை  எட்டாம் நாளான நாளை சனிக்கிழமை (30)  முள்ளிவாய்க்காலை அடைகின்றது.  நாளை மறுநாள் ஒன்பதாம் நாள் (31) ஞாயிற்றுக்கிழமை வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை சென்றடைகின்றது. அங்கு குளிர்த்திச்சடங்கு பார்க்க ஒருநாள் தங்கியிருந்து ஓய்வெடுப்பர். ஜெயா வேல்சாமி தலைமையிலான 121 பேர் கொண்ட இந்த பாதயாத்திரை கடந்த 23 ஆம் திகதி சந்நிதியிலிருந்து புறப்பட்டது. மேலும், […]

Read More