கதிர்காம காட்டுப் பாதை திறப்பில் மாற்றமில்லை – அன்னதானம் வழங்க கட்டுப்பாடு!
ஊடகங்களுக்கு கதவடைப்பு (வி.ரி.சகாதேவராஜா) கதிர்காம காட்டுப் பாதை திறப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி என்பதில் மாற்றமில்லை. அதேவேளை, உகந்த மலையில் இருந்து குமுக்கன் செல்லும் வழியில் அன்னதானம் தயாரித்து வழங்க தடை. தேவையானால் உகந்தயில் சமைத்து ஓரிரு மணி நேரத்தில் கொண்டு சென்று வழங்கலாம் எனக் கூறப்படுகிறது. கதிர்காமம் ஆடிவேல்விழா பாதயாத்திரை காட்டுப்பாதை தொடர்பான முக்கிய ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (17.06.2026). புதன்கிழமை லாஹூகல பிரதேச செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க […]