October 1, 2026

Blog Post

Kalmunai Net > 2026

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 169 மாணவர்கள் சித்தி. திருக்கோவில் கல்வி வலயம் மீண்டும் சாதனை.

(செல்வி வினாயகமூர்த்தி) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (02) புதன்கிழமை வெளியாகியுள்ள நிலையில் திருக்கோவில் கல்வி வலயம் இவ்வாண்டும் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட 882 மாணவர்கள் தோற்றிய நிலையில், 810 மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 91.84 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும், 169 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.கடந்த 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு பெறுபேறுகளில் குறிப்பிடத்தக்க […]

Read More

சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் நுவரேலியா கிறஹரி ஏரி

( வி.ரி. சகாதேவராஜா)  அண்மைக்காலமாக மலையக சுற்றுலாவில்   நுவரேலியா கிறஹரி ஏரி சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் பிரதான மையமாக திகழ்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாவிகள் அங்கு செல்கின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்குள்ள பனிமூட்டம் குளிர்கால சூழ்நிலை லேசான தூறல் என்பன சகலதரப்பினரையும் கவர்ந்திழுக்கின்றது. குறிப்பாக படகுச்சவாரி, ஜெற் அதிவேக படகுச் சவாரி ,குதிரைச் சவாரி என்பனவும் சிற்றூண்டிகளும் பலரையும் கவர்ந்திழுக்கின்றன.

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் ரண்விமன” இரண்டு வீடுகள் கையளிப்பு!

அரவிந்தன் சமுர்த்தி “ரண்விமன” வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள், கல்முனை வடக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் நிர்வாக உத்தியோகத்தர் எம். ஜீவராஜ் அவர்களினால் இன்று (02) பெரியநீலாவணை–01 மற்றும் கல்முனை–01C பிரிவுகளில் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ். ஸ்ரீநாதன், சமுர்த்தி முகாமையாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், வலய உதவியாளர்கள், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி தலைவர்கள் மற்றும் சங்கத் தலைவிகள் […]

Read More

கல்முனை வடக்கில் முதன்முறையாக “வெற்றிக்கு அப்பால்” தலைமைத்துவப் பயிற்சி; 50 இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கல்!

அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் EQUIP / Maxwell Leadership அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த “வெற்றிக்கு அப்பால் – Beyond Success Roundtable Initiative” எனும் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இப்பயிற்சியை நிறைவு செய்த 50 இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (01.09.2026) நடைபெற்றது. இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவ ஆற்றல்களை மேம்படுத்துதல், அவர்களின் சிந்தனை முறை மற்றும் தலைமைத்துவ மனப்பான்மையை வளர்த்தல், தனிப்பட்ட […]

Read More

அம்பாறையில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற 42ஆவது போர்வீரர்கள் நினைவேந்தல் விழா

பாறுக் ஷிஹான்தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மறைந்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை(1)  உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் ஆன்ம சாந்திக்காக பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சர்வமத வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தேசியக் கொடி மற்றும் பொலிஸ் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, வீரமரணமடைந்த வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன […]

Read More

நற்பிட்டிமுனையின் பெண் வைத்தியராக சாதனை படைத்தார் பாத்திமா ஷிரீன்

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவப் பீடக் கற்கையை நிறைவு செய்து அம்பாறை பொது வைத்தியசாலையில் இணைவு பெண்களின் மருத்துவக் கனவுக்குப் பாதையமைத்த வரலாற்றுச் சாதனை; கிராம மக்கள் பெருமிதம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனைக் கிராமத்தின் (முஸ்லிம் பிரிவு) வரலாற்றுப் பக்கங்களில் புதிய மைல்கல்லாக, அந்நிலத்தின் முதலாவது பெண் வைத்தியராக வைத்தியர் மஃமூது பாத்திமா ஷிரீன் (Dr. Fathima Shirin) சாதனை படைத்து ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளார். கடந்த 1986 ஆம் ஆண்டு […]

Read More

வெற்றிகரமாக நடைபெற்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சிறப்புப் பொதுக்கூட்டம்

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் (EPDOTU)  சிறப்புப் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில், சங்கத் தலைவர். முஸம்மில் அபுசாலி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் முஸம்மில் அபுசாலி உரையாற்றுகையில்.. கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளையும் நலன்களையும் வென்றெடுப்பதற்காக சங்கம் தொடர்ந்தும் அயராது பாடுபடும் என்றும்  உத்தியோகத்தர்களின் ஒற்றுமையே சங்கத்தின் பலம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  சங்கத்தின் செயலாளர் […]

Read More

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் தீவிரம் – இராணுவம் குவிப்பு, 25 பேர் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள கடும் பதற்ற நிலை காரணமாக இதுவரை மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 5 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு மருத்துவமனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மேலதிக பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தினர் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More

உகந்தை முருகனாலயத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களின் சிரமதானப் பணி!

வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை முருகனாலயத்தில், நேற்று (05.07.2026) கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களால் ஆலய வளாகத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. வருடாந்தம் கதிர்காம பாதயாத்திரை மற்றும் ஆலய உற்சவத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகை தருவதால், அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஆலயச் சூழலை தூய்மைப்படுத்தும் நோக்கில் இச்சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிரமதானப் பணியுடன் பக்தர்களுக்கான அன்னதான […]

Read More

நாவிதன்வெளி ஸ்ரீ கற்பக விநாயகர் புகழ்பாடும் ‘தெய்வீக கானங்கள்’ இசைத்தட்டு வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளியைப் பூர்வீகமாகவும், பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் விவேகவெளி தமிழேந்திரன் (சரவணமுத்து நவேந்திரன்) இயற்றிய ‘தெய்வீக கானங்கள்’ எனும் பக்தி இசைத்தட்டின் வெளியீட்டு விழா, நாவிதன்வெளி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வளாகத்தில் ஆசிரியர் ஆலோசகர் எம். லக்குணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கன. மாதவராஜா அவர்களின் ஆசீர்வாதத்துடன் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் […]

Read More