September 30, 2026

Blog Post

Kalmunai Net > 2026

இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு பயணத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் சிறப்பு ஆன்மிக நிகழ்வு.

(செல்வி வினாயகமூர்த்தி) இலங்கையில் இராமகிருஷ்ண மிஷன் தனது நூற்றாண்டு கால ஆன்மிக, கல்வி மற்றும் சமூக சேவைப் பயணத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அதன் நூற்றாண்டு பயணத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் கிரகசாந்தி பிரார்த்தனை, சிறப்பு யாக பூஜை மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில், அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, சமூக ஒழுக்கத்தை மேம்படுத்துவதுடன் மாணவர்களிடையே அறநெறிக் கல்வி மற்றும் ஆன்மிக […]

Read More

கல்முனை றோட்டரி கழகத்தின் 27 வது புதிய தலைவராக திருநாவுக்கரசு பதவியேற்பு

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை றோட்டரி கழகத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக ரொட்டேரியன். இரா. திருநாவுக்கரசு நேற்று  (19) காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகபதவியேற்றார். இப் பதவியேற்பு நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைதீவு றோட்டரி மாவட்டம் 3220 இன் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன். குமார் சுந்தரராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய தலைவரின் பதவியேற்பை சிறப்பித்தார். கல்முனை ரோட்டரிக் கழகத்தின் தலைவர் ரொட்டேரியன் எஸ். தரணிதரன் தலைமையில் பதவியேற்பு […]

Read More

உள்ளூராட்சி வார கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சாம்பியனானது அக்கரைப்பற்று மாநகர சபை அணி – இரண்டாமிடம் பெற்றது கல்முனை மாநகர சபை.!

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை உள்ளுராட்சி மன்றங்களுக்கு இடையிலான லீக் முறையிலான மின்னொளி கிரிக்கெட் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று மாநகர சபை, கல்முனை மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகிய அணிகள் பங்குபற்றியிருந்தன. இத்தொடரிலே இறுதிப் போட்டிக்கு அக்கரைப்பற்று மாநகர சபை அணியும், கல்முனை மாநகர சபை அணியும் தெரிவு செய்யப்பட்ட நிலையில் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று […]

Read More

தண்டனை பெற்றோர் பரிமாற்றம், பரஸ்பர சட்ட உதவி: இலங்கை – சவூதி பேச்சுவார்த்தை

இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கிடையில் தண்டனை பெற்ற நபர்களை பரிமாறிக்கொள்வது மற்றும் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவாக இறுதி செய்வது குறித்து முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், சவூதி நீதியமைச்சின் சட்டங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மிஷால் பின் அலி அல்-பலாவியை ரியாத்தில் உள்ள நீதியமைச்சில் சந்தித்துள்ளார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீதித்துறை மற்றும் சட்டத்துறை சார்ந்த […]

Read More

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 218வது வருடாந்த திருவிழா

அம்பாறை மாவட்டத்தின் புகழ்பெற்றதும் பழமை வாய்ந்ததுமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 218வது வருடாந்த திருவிழா 20.09.2026 க.டினேஸ் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் திருவிழா திருப்பலியானது 20.09.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:15 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி ஜினோ சுலக்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. கடந்த 9 நாட்கள் மாலை வழிபாடுகள் இறைமக்களை தயார்படுத்தும் வண்ணம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தியதாக இறைமக்களுக்கு சிந்தனைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சனிக்கிழமை மாலை வேஸ்பர் நற்கருணை […]

Read More

இன்றும் (20) அனோஜனுடன் தொடர்பை ஏற்படுத்திய சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந்

சவுதியில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள அனுஜனின் விடுதலை தொடர்பில் அதிக கரிச்சினையோடு செயற்பட்டு வரும் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவரான ரஜிவ்காந் அனோஜனோடு இன்று தொலைபேசியில் பேசிய பின்னர் அவர் வெளியிட்டுள்ள பதிவு மிகவும் பொறுப்போடு அனைவர்க்கும் அறியத்தருகின்றேன். இன்று காலை 10.30 மணி அளவில் அனோஜனின் குடும்பத்தை சந்தித்தேன். அப்பொழுது அனோஜனின் தம்பி ஹம்சிதனுக்கு சவுதியில் இருந்து அனோஜனின் அழைப்பு வந்தது. நான் அனோஜனிடம் 10 நிமிடங்கள் பேசினேன். இறுதியாக ஜூன் 30ம் திகதி அவர் […]

Read More

அனோஜனுக்காக வளத்தாப்பிட்டியில் ஒன்று கூடி மக்கள் பிரார்த்தனை!

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி மக்கள் தீபமேந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன், விடுதலைக்கான மகஜரிலும் கையொப்பமிட்டு வருகின்றனர். சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, சம்மாந்துறை பிரதேசத்தின் வளத்தாப்பிட்டி பகுதியில் இன்று மக்கள் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதன்போது மக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், அவருக்கு மன்னிப்பு கிடைக்கவும் பிரார்த்தனை செய்ததுடன், அவரது விடுதலையை வலியுறுத்தும் மகஜருக்கான […]

Read More

அனோஜனின் விடுதலைக்காக  கையெழுத்து சேகரிப்பும்,கவனயீர்ப்பு மன்றாட்டமும் : பெருமளவில் தமிழ் முஸ்லிம் மக்கள் பங்கேற்பு

சௌவியதாசன், பாறுக் ஷிஹான்  சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு, விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று கையெழுத்து சேகரிப்பு மற்றும் கவனயீர்ப்பு  மன்றாட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது. சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்தொன்றைத் தொடர்ந்து அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் ஆரம்பத்தில் ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மேன்முறையீட்டின் அடிப்படையில் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும், இலங்கை வெளிவிவகார அமைச்சு இதுவரை எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பைப் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த மக்கள் கவனயீர்ப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து மனிதாபிமான அடிப்படையில் நற்பிட்டிமுனை மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து, அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு வருகின்றனர். “ஒரு உயிரைக் காப்போம்; மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கையின் மூலம், அனோஜனின் குடும்பத்தினருக்கு ஆதரவையும், உரிய அதிகாரிகளுக்கு அவசரமான நடவடிக்கைக்கான வேண்டுகோளையும் மக்கள் வெளிப்படுத்தினர். இலங்கை வெளிவிவகார அமைச்சும் சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புகளை மேற்கொண்டு, அனோஜனின் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்களம்,தமிழ், முஸ்லிம்  அரசியல்வாதிகளும் பொது அமைப்புகளும் பொதுமக்களும் இலங்கையராக அனுஜனின் விடுதலைக்கான முன்னெடுப்புக்களை நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

சவுதி அரேபிய தூதரகத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்வுள்ளோம்

சவுதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலை வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். மதநிந்தனை குற்றச்சாட்டின் கீழ் சவுதி அரேபிய நீதிமன்றத்தால் கடந்த மாத தொடக்கத்தில் அனோஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த நிலையில், தற்போது அவருக்கு […]

Read More

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கண்ணகிகிராமத்தில் சிரமதானம்.

(செல்வி வினாயகமூர்த்தி) அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,இதன் இரண்டாம் கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமம் 1ல் “அத்தம்” வேலைத்திட்டத்தின் கீழ் மாபெரும் சிரமதானப் பணி (19) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.கண்ணகிகிராமம் 1 பகுதியில் அமைந்துள்ள ஆலமரத்தடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலை வளாகத்தின் வெளிப்புறச் சூழல், சனசமூக நிலையம், தபாலகம், பாலர் பாடசாலை, சுகாதார நிலையம்,தொழில்பயிற்ச்சி நிலையம் உள்ளிட்ட வெளிப்புறப் பகுதிகள் […]

Read More