November 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

ஒக்டோபர் 17ஆம் திகதி வழக்கு விசாரணையின் பின்னரே பூரண நிம்மதி கிடைக்கும் என அனோஜனின் சகோதரன் பேட்டி!

அனோஜனின் மரண தண்டனை தளர்த்தப்பட்டதாகப் பிரதி வெளிநாட்டு அமைச்சர் தொலைபேசியில் தகவல்!ஒக்டோபர் 17ஆம் திகதி வழக்கு விசாரணையின் பின்னரே பூரண நிம்மதி கிடைக்கும் என அனோஜனின் சகோதரன் பேட்டி!நற்பிட்டிமுனையிலுள்ள இல்லத்தில் குடும்பத்தினர் சோகமும் எதிர்பார்ப்பும் நிறைந்த மனநிலையில்!  (பாறுக் ஷிஹான்)சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த கல்முனை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அருண் […]

Read More

90 வது அகவையில் புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் நாவிதன்வெளியில்கௌரவிப்பு!

90 வது அகவையில் புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் நாவிதன்வெளியில்கௌரவிப்பு! ( வி.ரி.சகாதேவராஜா)  சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தின் 90 வது அகவையை முன்னிட்டு, முதற்கட்டமாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளிற்கு மேல் பெற்று சித்தி பெற்ற 35 சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(09) நடைபெற்றது. பழைய மாணவர்களின்  அனுசரணையில், பாடசாலையின் அதிபர் திருமதி.எஸ்.பிரியசாந்தினி தலைமையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இ.ரூபசாந்தன் பிரதம அதிதியாக கலந்து […]

Read More

Rising Hands , NSN Lanka இணைந்து தொழிற்பயிற்சி கற்கையை இன்று கல்முனையில் ஆரம்பித்து வைத்தது!

Rising Hands நிறுவனத்தின் ஊடாக NSN Lanka நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் நடைபெறுகின்ற தொழிற்பயிற்சி கற்கை நெறிக்கு நாவிதன்வெளி, கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பயனாளிகளுக்குறிய திட்ட ஆரம்ப நிகழ்வு (Phase -02) இன்று உத்தியோகபூர்வமாக நிறுவனத்தின் இயக்குனர் திரு. T.இளையராஜா தலைமையில் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அதிதிகளாக NSN Lanka நிறுவனத்தின் திரு.ஜெயபிரகாஷ் , ஹேமலதா நிறுவனத்தின் ஆய்வாளர் A.M.M. Riyas, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் […]

Read More

அமரர் மகதீசன் ஞாபகார்த்த கிண்ணம் – 2026 – துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம் சம்பியன்

சேனைக்குடியிருப்பு வின்னர் விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் மகதீசன் ஞாபகார்த்த கிண்ணம் – 2026 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகமும் 15ஆம் கிராமம் செந்தமிழ் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம் வெற்றியைத் தனதாக்கி 2026ஆம் ஆண்டின் சம்பியனாக மகுடம் சூடியது. 🌟 விருதுகளை வென்ற எமது வீரர்கள்!🏅 இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன்: ரஜீவன்🏅 தொடரின் ஆட்டநாயகன்: தயாளன்🏅 சிறந்த பந்துவீச்சாளர்: ஜீவன்இதில் […]

Read More

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பயனாக இந்தத் தீர்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இலங்கை ஜ்னாதிபதி,இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டக் குழுவினருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Read More

அனோஜன் விவகாரம்  ஜப்பான் தூதுவரிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் மகஜர் கையளிப்பு

சவூதி மரண தண்டனை அச்சுறுத்தலைத் தடுக்க இராஜதந்திரத் தலையீட்டை வலியுறுத்திச் சந்திப்பு பாறுக் ஷிஹான் சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் விவகாரத்தில் துரித இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா (Akio Isomata) அவர்களிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் விசேட மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார். யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அண்மையில் விஜயம் […]

Read More

நாவிதன்வெளி பிரதேச சபையால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு போட்டிகள்

நாவிதன்வெளி: தேசிய வாசிப்பு மாதம் – 2026ஐ முன்னிட்டு, நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் பேச்சுப் போட்டி மற்றும் வாசிப்புத்திறன் போட்டிகள் நேற்று (13) பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றன. “வாழ்நாள் முழுவதும் புத்தகத் தோழன்” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வுகளை, பிரதேச சபையின் தவிசாளர் ரூபசாந்தன் தலைமையுரையாற்றி ஆரம்பித்து வைத்தார். பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் வாசிப்புத்திறன், மொழித்திறன், படைப்பாற்றல், சிந்தனைத்திறன் மற்றும் பேச்சாற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. […]

Read More

மட்டக்களப்பில் 1000 மண் பரிசோதனை விழிப்புணர்வுத் திட்டம் ஆரம்பம்

-கிலசன்- ​மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மாவட்ட வரலாற்றிலேயே முதன்முறையாக 1000 மண் மாதிரிகளைப் பரிசோதிக்கும் பிரம்மாண்ட “மண் பரிசோதனை விழிப்புணர்வுத் திட்டம்” சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.​மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திரு. M. பரமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது. மட்டக்களப்பு விவசாயத் திணைக்களம் (விரிவாக்கம்) மற்றும் தேசிய அடிப்படைக் கற்களுக்கான நிறுவனம் (NIFS – National Institute of Fundamental Studies) ஆகியன இணைந்து இக்கூட்டு நடவடிக்கையை […]

Read More

புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்கு நாவிதன்வெளியில்கௌரவிப்பு.

கே.எஸ்.கிலசன் சது/நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தின் 90 வது அகவையை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் முதற்கட்டமாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளிற்கு மேல் பெற்று சித்தி பெற்ற சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இன்று நடைபெற்றது. பழைய மாணவர்களின் பூரண அனுசரணையில் பாடசாலையின் அதிபர் திருமதி.எஸ்.பிரியசாந்தினி தலைமையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இ.ரூபசாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகள் கௌரவ அதிதிகள், […]

Read More

ஷிரந்தி ராஜபக்சவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிப்பு

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் விளக்கமறியல் உத்தரவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இதன்போது, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஷிரந்தி ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிறையில் […]

Read More