நெருக்கடியான நிலையிலும் இஸ்ரேலின் கோரிக்கையை நிராகரித்து பாலஸ்தீனத்தோடு நிற்கும் சவூதி அரேபியா
(எழுத்து : வை.அறபாத்) சர்வதேச அரசியலில் தேசங்களின் முதன்மை நோக்கம் எப்போதும் தற்காப்பும், தேசியப் பாதுகாப்பினுடைய எல்லைகளைப் பாதுகாப்பதுமே ஆகும். ஆனால், சமகாலப் புவிசார் அரசியலில், நேரடிப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் தாண்டி ஒரு நாடு தனது வெளியுறவுக் கொள்கையின் தார்மீக அறத்தில் சமரசமின்றி உறுதியாக நிற்க முடியும் என்பதற்கு சவூதி அரேபியா சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. யேமனில் இருந்து தொடரும் ஹூதி அமைப்பினரின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் சவூதியின் வான்பரப்பும் உட்கட்டமைப்புகளும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வரும் […]