September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – இன்று கல்முனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கோடீஸ்வரன் எம்.பி. 

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் குறிப்பாக தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும். இவ்வாறு கல்முனையில் இன்று (18) திங்கள்கிழமை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன்  தெரிவித்தார்.  கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பிரதான வீதியில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் […]

Read More

காரைதீவில் திருக்குளிர்ச்சிச் சடங்குக் காலம் புனித வாரமாகும்- திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கருத்து!!

(  வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் வருடாந்த திருக்குளிர்ச்சிச்  சடங்கு காலம் புனித வாரமாகும். அக் காலப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் பயபக்தியுடன் ஆசாரமாக நடந்து கொள்ள வேண்டும் வேண்டும்   என்று திருக்குளிர்த்தி  சடங்கு தொடர்பான ஆலோசனைக்  கூட்டத்தின் போது கருத்துரைக்கப்பட்டது . குறித்த சடங்கு தொடர்பான ஆலோசனை கூட்டமும் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன  வெளியீட்டு நிகழ்வும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(15) ஆலய கேட்போர் கூடத்தில் தர்மகர்த்தாக்களான இரா.குணசிங்கம், எஸ்.நமசிவாயம் ஆகியோர் […]

Read More

ஊடக முதுசொம் ஏ.எல்.எம். சலீம் நினைவு மலர் வெளியீடும், நினைவஞ்சலியும்தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்றது

செல்லையா பேரின்பராசா  சமீபத்தில் காலம் சென்ற கிழக்கின் ஊடக முதுசொம் ஏ.எல்.எம். சலீம் அவர்களுக்கான நினைவஞ்சலியும் , அவர் பற்றிய நினைவு மலர் வெளியீடும் ,நினைவுப் பேருரைகளும் இடம் பெற்றது . சிரேஷ்ட ஊடகவியலாளரும், சலீமின் சிஷ்யனுமான,  ஓய்வுநிலை அதிபர் செல்லையா பேரின்பராசாவின் தொடக்கவுரையியில் ஆரம்பமான இந்  நிகழ்வில் அரசியல்வாதிகள் பேராசிரியர்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தினர். இந் நிகழ்வு தலைநகர் கொழும்புபின் தமிழ்ச் சங்கத்தில் – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்  ஏற்பாட்ல்  சனிக்கிழமை 16.05.2026 […]

Read More

கல்முனையில் தமிழ் இளைஞர் சேனையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில், கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையினரால் இன்று (17) கல்முனை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன், உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தமிழ் இளைஞர் சேனையின் உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Read More

திருக்கோவில் வெட்டுகுளத்து பிள்ளையார் கோவில் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

பாறுக் ஷிஹான்தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் முன்னிட்டு திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசி கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஏற்பாட்டில் திருக்கோவில் வெட்டுகுளத்து பிள்ளையார் கோவில் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  சுடரேற்றி அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. சனிக்கிழமை (16) மாலை   முள்ளிவாய்க்கால் கஞ்சி இங்கு  வழங்கி வைக்கப்பட்டதுடன் திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசி கட்சி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் […]

Read More

களுதாவளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் உணர்வு பூர்வ நிகழ்வு

களுதாவளை பொது மக்கள் ஏற்பாடு செய்த முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவு கூறும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று 18 இடம் பெற்றது,

Read More

போதைப்பொருள் விற்பனை சந்தேக நபர்கள் இருவர் கைது

பாறுக் ஷிஹான்ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை)  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின் போது வீடொன்றில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்கள்   போதைப்பொருட்களுடன் கைதாகினர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் […]

Read More

சோமாலியக் கடற்கொள்ளையர் அச்சுறுத்தல் மீண்டும் தீவிரம் : உலக கடல்வழிப் பாதுகாப்பில் பதற்றம்

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான போர் சூழ்நிலையைத் தொடர்ந்து, உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.குறிப்பாக சோமாலியக் கடற்கரைப் பகுதிகளில் கடற்கொள்ளையர் அச்சுறுத்தல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களிலேயே பல கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் முற்றுகையிடப்பட்டு கடத்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.சோமாலியக் கடற்கரை மற்றும் சோமாலியப் படுகைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த அபாய நிலையை அடுத்து, […]

Read More

நாவிதன்வெளி இலங்கை வங்கி கிளை அலுவலகம் புதிய இடத்தில் திறந்து வைப்பு

நாவிதன்வெளி இலங்கை வங்கி கிளை அலுவலகம் புதிய இடத்தில் திறந்து வைப்பு பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி அன்னமலை பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளை கட்டிடம், புதிய இடத்திற்கு இடமாற்றப்பட்டு பொதுமக்களுக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பிகும் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வுகள் இலங்கை வங்கி கிழக்கு மாகாண பொது முகாமையாளர் திருவாளர் ஏ.சி.மகவந்த தலைமையில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது. நாவிதன்வெளி அன்னமலை பிரதான வீதியில் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு […]

Read More

அன்னையர் தின நிகழ்வில் மேடையேறிய பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் 

அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கதிரவன் கலைக் கழகத் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் மட்டக்களப்பு கல்லடி துளசி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றபோது மேடையேறிய பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகள்…  படங்கள். வி.ரி.சகாதேவராஜா

Read More