September 21, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 218வது வருடாந்த திருவிழா

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 218வது வருடாந்த திருவிழா

அம்பாறை மாவட்டத்தின் புகழ்பெற்றதும் பழமை வாய்ந்ததுமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 218வது வருடாந்த திருவிழா 20.09.2026

க.டினேஸ்

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் திருவிழா திருப்பலியானது 20.09.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:15 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி ஜினோ சுலக்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

கடந்த 9 நாட்கள் மாலை வழிபாடுகள் இறைமக்களை தயார்படுத்தும் வண்ணம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தியதாக இறைமக்களுக்கு சிந்தனைகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சனிக்கிழமை மாலை வேஸ்பர் நற்கருணை ஆராதனை வழிபாடும் இடம் பெற்றது.

இன்றைய திருவிழா திருப்பலியினை மண்ணின் மகிந்தன் (முதல் குரு) அருட்தந்தை இனனாசி ஜோசப் அடிகளார் தலைமைதாங்க அருட்பணியாளர் அம்புறோஸ் அடிகளாரும், பங்குத்தந்தை ஜினோ சுலக்சன் அடிகளாரும் இனைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்து இறைவேண்டுதல் செய்திருந்ததுடன் அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர்.

திருப்பலி நிறைவில் திருச்சிலுவை பவனி ஆலய சுற்றி பவனியாக எடுத்துவரப்பட்டதுடன் திருச்சிலுவை புகழ்பாக்கள் இசைக்கப்பட்டு கவிகள் இசைக்கப்பட்டு இறுதி செபத்துடன் புனித திருச்சிலுவை ஆசீரை அருட்பணி இனனாசி ஜோசப் அடிகளார் இறைமக்களுக்கு வழங்கி வைத்தார்.

அத்தோடு பங்குத்தந்தை அவர்களினாலும், திருவிழா சிறப்பாக அமைய சகல வழிகளிலும் உதவிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்ததோடு, திருவிழா வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *