September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பொத்துவிலில் பெண்கள் வன்முறைக்கு எதிரான வீதியோர விழிப்புணர்வு நாடகம்.

பொத்துவிலில் பெண்கள் வன்முறைக்கு எதிரான வீதியோர விழிப்புணர்வு நாடகம்.

(செல்வி வினாயகமூர்த்தி)

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பொத்துவில் குண்டுமடு அன்னை தெரேசா மகளிர் சங்கம், AWF நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த வீதியோர விழிப்புணர்வு நாடகம் நேற்று (12.09.2026) சனிக்கிழமை பொத்துவில் பகுதியில் நடைபெற்றது.

குண்டுமடு மத்திய வீதி, கனகர் வீதி மற்றும் இன்ஸ்பெக்டர் ஏத்தம் பிரதான வீதி ஆகிய மூன்று இடங்களில் இவ்விழிப்புணர்வு நாடகம் மூன்று பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டது.

பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடகத்தின் ஊடாக பல்வேறு விடயங்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
இந்நிகழ்வை வீதியோரமாகக் கூடியிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன், மூன்று பகுதிகளிலும் நடைபெற்ற நிகழ்வுகளில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *