September 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை மாநகர சபையின்நடமாடும் சேவை.!

கல்முனை மாநகர சபையின்நடமாடும் சேவை.!

(அஸ்லம் எஸ் மௌலானா)

பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி வார நிகழ்வுகள் 2026.09.14 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 19 ஆம் திகதி சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளன.

இதில் ஓர் அங்கமாக எமது கல்முனை மாநகர வாழ் மக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்முனை மாநகர சபையின் நடமாடும் சேவை நாளை 14 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை 03 இடங்களில் நடைபெறவுள்ளது.

நடமாடும் சேவை நடைபெறும் இடங்கள்:

  1. பிரதான அலுவலகம், கல்முனை மாநகர சபை
  2. சாய்ந்தமருது பொது நூலகம்
  3. மருதமுனை பொது நூலகம்

நடமாடும் சேவையில் வழங்கப்படவுள்ள சேவைகள்:

  • ஆதன வரி பெயர் மாற்றம்
  • ஆதன வரி புதிய இலக்கம் வழங்குதல்.
  • கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்.
  • வியாபார உரிமம் (Trade Licence) வழங்குதல்.
  • அதன வரி உள்ளிட்ட கட்டணங்களை செலுத்துதல்.
  • Street Line Certificate, Ownership Certificate, Nonvesting Certificate போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்.
  • பழுதடைந்த தெருவிளக்குகள் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பித்தல்.
  • ஏனைய சேவைகள்/ முறைப்பாடுகள்/ தீர்வுகள்

அன்பார்ந்த பொது மக்களே,
உங்களுக்காக உங்கள் காலடிக்கே கொண்டு வரப்படும் சேவைகளை தவறாமல் பெற்றுப் பயனடையுமாறு
கல்முனை மாநகர சபை அன்புடன் அழைக்கிறது.

மேலதிக விபரங்களுக்கு 0672229275 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கல்முனை மாநகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *