November 12, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > அனோஜனுக்கு விடுதலை கிடைத்தது

அனோஜனுக்கு விடுதலை கிடைத்தது

சவூதியில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவராஜாவுக்கு விடுதலை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அனோஜனின் விடுதலை தொடர்பாக இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த விடுதலை கிடைத்துள்ளது.

அனோஜனின் விடுதலை தொடர்பில் செயற்பட்டு வந்த சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவரான பொறியியலாளர் சிவதர்சன்  (Kalmunai Net) க்குத் தெரிவிக்கையில், வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதாகக் கூறினார்

.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சிவராசா அனோஜனை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *