November 11, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கஸ்ஸப தேரருக்கு பிடியாணை!

கஸ்ஸப தேரருக்கு பிடியாணை!

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறிய பலாங்கொடை கஸ்ஸப தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனையடுத்து, கஸ்ஸப தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை, அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ருவன்வெலிசாய பகுதியில் கஸ்ஸப தேரர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *