November 11, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் சி. சுதாகரன் ஓய்வு!

கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் சி. சுதாகரன் ஓய்வு!

கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் திரு. சி. சுதாகரன் அவர்களின் சேவைக்கால நீடிப்பு நிறைவு

பா.மேனன்

கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. சி. சுதாகரன் அவர்களுக்கு மேலதிகமாக வழங்கப்பட்ட சேவைக்கால நீடிப்பு நிறைவடைந்துள்ளது.


2008 ஆம் ஆண்டு முதல் கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய அவர், கடந்த 2002 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்திற்கான பதில் பணிப்பாளராகவும் நியமனம் பெற்றார். 29/01/2026 அன்று அரச சேவையிலிருந்து முறையாக ஓய்வு பெறும் வரை, மிகுந்த அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றிப் பலரின் நன்மதிப்பைப் பெற்றார்.


அவரது சேவைக்காலத்தில் அவர் ஏற்படுத்திய அளப்பரிய மாற்றங்களைக் கண்ட மாகாண ஆளுநர் அவர்கள், தொடர்ந்து பணிப்பாளராகக் கடமையாற்றுமாறு கேட்டுக்கொண்டதற்கமைய அவரது சேவைக்காலம் நீடிக்கப்பட்டது. அதற்கமையத் தனது பணிகளைத் தொடர்ந்த அவர், கடந்த 07/11/2026 அன்றோடு தனக்கு வழங்கப்பட்ட மேலதிக சேவைக்காலப் பணிகளிலிருந்தும் முழுமையாக ஓய்வு பெற்றுக்கொண்டார்.


தனது பணிக்காலத்தில் பாணமை முதல் திருகோணமலை வரையிலான மீனவ சமூகத்திற்காகப் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆற்றி, மக்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்தார். சிறந்த நிர்வாகியாக மட்டுமன்றி, அவர் ஒரு சிறந்த கவிஞராகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சேவைக்காலத்தில் கிராம மட்டங்களில் பல நூறு மீனவசங்கங்களை உருவாக்கியும் பனரமைத்தும் சிறப்பாக இயங்கவைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *