November 6, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > இந்திய தூதரக அதிகாரியுடன் கல்முனை ஆதாரவைத்தியசாலை தொடர்பான கலந்துரையாடல்; மூன்று எம்பிக்கள் பங்கேற்பு!

இந்திய தூதரக அதிகாரியுடன் கல்முனை ஆதாரவைத்தியசாலை தொடர்பான கலந்துரையாடல்; மூன்று எம்பிக்கள் பங்கேற்பு!

( வி.ரி.சகாதேவராஜா)

இந்திய தூதரக அரசியல் விவகார செயலாளர் ராம்பாபுவுடன், கல்முனை ஆதார வைத்தியசாலை தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.

கொழும்பு கோல் பேஸ் கோட்டலில் இன்று (6) காலை இச் சந்திப்பு இடம் பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான கவி.கோடீஸ்வரன், ஞா. ஸ்ரீநேசன், ,ரி.சத்தியலிங்கம் ஆகியோருடன்  கல்முனை ஆதார வைத்தியசாலை குழுவின் தவிசாளர் சந்திரசேகரம் ராஜன், பொருளாளர் இ.ரூபசாந்தன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் .

ஆதாரவைத்தியசாலையின் அவசிய தேவைகள் குறித்து அங்கு ஒருமணி நேரம் கலந்துரையாடல் நடைபெற்றது.

கலந்துரையாடல் திருப்தி அளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *