November 6, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > விசேட தேவையுடைய மாணவர் விளையாட்டில் திருக்கோவில் கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை!

விசேட தேவையுடைய மாணவர் விளையாட்டில் திருக்கோவில் கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை!

( வி.ரி.சகாதேவராஜா)

 விசேட தேவையுடையோருக்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில், திருக்கோவில் கல்வி வலய மாணவர்கள் மாபெரும் வெற்றிகளைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

இப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று  (05.11.2026) நடைபெற்றது.

மேற்படி வலயம் பெற்ற வெற்றி விபரங்களின்படி முதலாம் இடங்கள் – 12,இரண்டாம் இடங்கள் – 03, மூன்றாம் இடங்கள் – 03 ஆகும்.

திருக்கோவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் (விசேட கல்விப் பிரிவு)

மற்றும் திருக்கோவில் பொத்துவில் மத்திய மகா வித்தியாலயம் (விசேட கல்விப் பிரிவு) ஆகிய பாடசாலைகள் பங்கேற்றுச் சாதனை படைத்தன.

வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.தடைகளைத் தாண்டி, தங்களது அசாத்திய திறமையாலும் விடாமுயற்சியாலும் சாதித்துக் காட்டிய  சிறப்புச் சம்பியன்களின் இந்த வெற்றி, வலயத்திற்கும் பாடசாலைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளது என திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *