October 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை கௌரவித்து விருதுகள் 2026- Green Farmer Awards – 2026

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை கௌரவித்து விருதுகள் 2026- Green Farmer Awards – 2026


கே.எஸ்.கிலசன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பசுமை விவசாய முறைகளைக் கடைப்பிடித்து சிறப்பாகச் செயற்பட்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் பசுமை விவசாயிகள் விருது வழங்கும் நிகழ்வு சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களும், கௌரவ அதிதிகளாக இலங்கை விஞ்ஞான ஆராய்ச்சி முன்னேற்ற கழகத்தின் கிழக்கு பிராந்திய தலைவர் எந்திரி. வினோத்ராஜ், விவசாய பிரிவின் தலைவர் திருமதி. நிறஞ்சனா றொட்னி பெர்ணாண்டோ, பேராசிரியர் திரு. றொட்னி பெர்ணாண்டோ, உதவி விவசாய பணிப்பாளர்களான திருமதி. வேணுதாசன், திருமதி. சுகன்யா பிரகீத், திரு.கே.டீ.யூ. சமன்குமார, திரு.இ.சுகுந்ததாசன், திருமதி. நித்தியா நவரூபன் ஆகியோரும், பண்ணை முகாமையாளர் திருமதி. மதுமிதா தினேஸ், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் சிறந்த விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

புத்தாக்க முயற்சிகளுடன் சிறந்த விவசாய நடைமுறைகளை பின்பற்றி வர்த்தக ரீதியில் மரக்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளில் போட்டிக்கு விண்ணப்பித்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் வெற்றியாளர்களாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

முதலாம் இடத்தை பெற்ற விவசாயிக்கு 100000 ரூபாய் பணப்பரிசிலும், இரண்டாம் இடத்தை பெற்ற விவசாயிக்கு 75000 ரூபாய் பணப்பரிசிலும், மூன்றாம் இடத்தை பெற்ற விவசாயிக்கு 50000 ரூபாய் பணப்பரிசிலும், ஆறுதல் பரிசில்களாக 4 விவசாயிகளுக்கு தலா 20000 ரூபாவும் பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

முன்னோடி விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *