September 30, 2026

Blog Post

Kalmunai Net > 2026 > September

கிழக்கில் 17கல்விவலயங்களுள் திருக்கோவில்  வலயம் முதலிடம் – வலயக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார் பெருமிதம்!

( வி.ரி.சகாதேவராஜா) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 79.59 சதவீத சித்தியைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் 17 கல்வி வலயங்களுள்  முதலாம் இடத்தை திருக்கோவில் வலயம் பெற்று சாதனை படைத்துள்ளது. கிழக்கில் இரண்டாம் இடத்தில் மட்டக்களப்பு வலயமும்,  மூன்றாம் இடத்தை அம்பாறை வலயமும், நான்காவது இடத்தில் தெகியத்த கண்டிய வலயமும் ஐந்தாவது இடத்தில் கல்முனை வலயமும் பெற்று முதல் ஐந்து இடங்களை அலங்கரிக்கின்றது. நேற்று இத்தரப்படுத்தல் பகுப்பாய்வு அறிக்கை வெளியானது.  திருக்கோவில் கல்வி வலயத்தில் இம்முறை 169 […]

Read More

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராக எம்.சி.அப்துல் நஸார் நியமனம்

(மருதமுனை செய்தியாளர்) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய பிரதி அதிபராக எம்.சி. அப்துல் நஸார் திங்கட்கிழமை (14) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பிரதி அதிபரை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.பி. அகமட் ராஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், நலன்விரும்பிகள், உதவி அதிபர்கள், சிரேஷ்ட பகுதி தலைவர்கள் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் […]

Read More

கனடாவில் சிடாஸ் அமைப்பின் 21வது ஆண்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது!

கனடாவில் சிடாஸ் அமைப்பின் 21வது ஆண்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது! கிழக்கு இலங்கை குழந்தைகள் மேம்பாட்டுச் சங்கம் – கனடா chidaes Canada) அமைப்பின் 21வது ஆண்டு விழா மற்றும் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்தக் கூடுகை, செப்டெம்பர் 12ஆம் திகதி சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. அமைப்பின் தலைவர் திரு. நோ. விஜயரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, “21 ஆண்டுகள் – அன்பால் இணைந்த பயணம்!” என்ற கருப்பொருளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நட்புறவுச் சந்திப்புகள், கலை நிகழ்ச்சிகள், சுவையான […]

Read More

துறைநீலாவனை சிவசக்தி நடாத்திய சுற்றுப் போட்டி: நற்பிட்டிமுனை விவேகானந்தா வெற்றி!

துறைநீலாவணை நிருபர். துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்து நடாத்திய மென்பந்து சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி துறைநீலாவணை மகாவித்தியாலய நாகேந்திரன் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் 13.09.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை இடம்பெற்றது. இந்த இறுதிப் போட்டி நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திற்கும்,  வீரமுனை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் இடம்பெற்றது. இதில் நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக் கழக வீரர்கள்வெற்றிவாகை சூடி வெற்றிக் கிண்ணத்தையும் பணப்பரிசையும் தட்டிக் கொண்டனர். இவர்களுக்கான வெற்றிக் கிண்ணம் பணப் பரிசு […]

Read More

ஆவணி சதுர்த்தி நாளில் கோளாவில் அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம்.

(செல்வி வினாயகமூர்த்தி) கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று, கோளாவில் அருள்மிகு அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆவணி மகோற்சவப் பெருவிழா பக்திப்பூர்வமாக இடம்பெற்று வருகின்றது. கடந்த சனிக்கிழமை (05.09.2026) கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாண்டிற்கான மகோற்சவத்தில் நவதின உற்சவங்கள் சிறப்பாக இடம்பெற்று வந்தன. இந்நிலையில், ஆவணி சதுர்த்தி நாளான இன்று திங்கட்கிழமை (14.09.2026), பத்தாம் நாள் உற்சவமாக சமுத்திர தீர்த்தோற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றதுடன் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டதுடன்,புனித நாளில் சமுத்திர […]

Read More

பெண்களுக்கான நவீன சமையற்கலை செயலமர்வு-இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குள் இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் உயரிய நோக்கோடு, எடின்பரோ (Edinborough) நிறுவனத்தின் அனுசரணையுடன் “பல் சுவை வசந்தம்” இலவச சமையற்கலை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு சனிக்கிழமை  (12) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி திட்டப் பிரிவின் ஏற்பாட்டில், சமுர்த்தி திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை ஊவா சமூக வானொலி […]

Read More

வெருகல் மகோற்சவம் ஆரம்பம் !

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் (12) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இம்முறை வழமைக்கு மாறாக கிழக்கின் பல பாகங்களிலுமிருந்து  ஆயிரக்கணக்கான அடியார்கள் பாதயாத்திரை மேற்கொண்டு  ஆலயத்தை அடைந்தார்கள் . அருகில் மகாவலி நதியில் நீராடி முருகப்பெருமானை வழிபடுகின்றனர். ஏராளமான கடைத் தெருக்கள் உள்ளன.

Read More

ஜனாதிபதி நிதியத்தின் திறம்படச் செயல்பாட்டில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு அம்பாறை மாவட்டத்தில் 3ஆவது இடம்

பிரதமர் ஹரினி அமரசூரிய கையால் விருது வழங்கி கௌரவிப்பு பாறுக் ஷிஹான் மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலக மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலகம் திறம்படச் செயல்பட்டு அம்பாறை மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சேவைகளின் ஊடாக, மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத உதவிகளைப் பொதுமக்களுக்கு விரைவாகப் பெற்றுக்கொடுப்பதில் கல்முனை பிரதேச செயலகம் […]

Read More

கல்முனை , நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ கணேசர் தேவஸ்தானத்தின் வருடாந்த பிரம்மோற்சவ விழாவின் தேர்த் திருவிழா நேற்று 13.09.2026 சிறப்பாக நடை பெற்றது. உற்சவம் கடந்த 5ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.35 மணி முதல் 12.00 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. இன்று தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

Read More

நாளை 14 முதல் 19ஆம் திகதிவரை டெங்கு ஒழிப்பு நடவடிக்கை – கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பே.கேதுஜன் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தேசிய டெங்கு ஒழிப்பு செயலகத்தின் அனுசரணையுடன், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், கல்முனை மாநகர சபை மற்றும் முப்படையினரின் பங்களிப்புடன் நாளை (14.09.2026) முதல் 19.09.2026 வரை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட அனைத்து […]

Read More