September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஆவணி சதுர்த்தி நாளில் கோளாவில் அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம்.

ஆவணி சதுர்த்தி நாளில் கோளாவில் அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம்.

(செல்வி வினாயகமூர்த்தி)

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று, கோளாவில் அருள்மிகு அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆவணி மகோற்சவப் பெருவிழா பக்திப்பூர்வமாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த சனிக்கிழமை (05.09.2026) கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாண்டிற்கான மகோற்சவத்தில் நவதின உற்சவங்கள் சிறப்பாக இடம்பெற்று வந்தன.

இந்நிலையில், ஆவணி சதுர்த்தி நாளான இன்று திங்கட்கிழமை (14.09.2026), பத்தாம் நாள் உற்சவமாக சமுத்திர தீர்த்தோற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றதுடன் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டதுடன்,புனித நாளில் சமுத்திர நீராடி இறையருள் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறவுள்ளதுடன்நாளை செவ்வாய்க்கிழமை (15.09.2026) பூங்காவனத் திருவிழா நடைபெறவுள்ளது. புதன்கிழமை (16.09.2026) விசேட வைரவர் பூசையுடன் இவ்வாண்டிற்கான ஆவணி மகோற்சவப் பெருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *