September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

நூருல் ஹுதா உமர் கருப்பைக் கழுத்து புற்றுநோய் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் கருப்பைக் கழுத்து புற்றுநோயின் அறிகுறிகள், நோயால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், ஆபத்துக் காரணிகள், நோயைக் கண்டறியும் முறைகள், சிகிச்சை முறைகள் மற்றும் வருமுன் காப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. கருப்பைக் கழுத்து புற்றுநோயை ஆரம்ப […]

Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் புலமைப் பரிசில் தருவேன்-   “ஒஸ்கார்” பொருளாளர் கணேசநாதன் அறிவிப்பு !!

( வி.ரி. சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நாமகள் வித்தியாலயத்தில் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் நான் நிச்சயமாக புலமைப் பரிசில் தருவேன். இவ்வாறு அங்கு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய  “ஒஸ்கார்” பொருளாளரும் இணைப்பாளருமான தம்பியப்பா கணேசநாதன் தெரிவித்தார். அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய நாவிதன்வெளி ஏழாம் கிராமம் நாமகள் வித்தியாலய மாணவர்கள் அனைவருக்கும் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து […]

Read More

2026 கதிர்காம காட்டுப்பாதை யூலை 10 இல் திறக்கப்படும்!

(  வி.ரி.சகாதேவராஜா) பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2026ம் ஆண்டுக்கான கதிர்காம காட்டுப்பாதை திறப்பு ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை என அதிகாரபூர்வமாக தீர்மானித்து அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று  (5) வெள்ளிக்கிழமை கதிர்காமத்தில், மொனராகலை அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அக் கூட்டத்திற்கு குடிநீர் வழங்கும் சமூக அமைப்பினர் உள்ளிட்ட சிலர் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டனர். எனினும் காட்டுப் பாதை திறப்பு தொடர்பான திகதி குறித்து இவர்களது கருத்து […]

Read More

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு-கல்முனை வர்த்தக நிலைய பணியாளருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

பாறுக் ஷிஹான் வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள  வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் மறுநாள் வியாழக்கிழமை(04) […]

Read More

ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை; விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!

(மர்சூக் எம். சல்பி ) சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானாவின் வீட்டில் இடம்பெற்ற பகற்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் ஒன்றில் காயமடைந்த தமது மகனை வைத்தியசாலையில் அனுமதித்து, அவருடன் பெற்றோர் தங்கியிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் விளையாட்டு மைதான ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால்பந்து […]

Read More

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தால் வெசாக் தினத்தை முன்னிட்டு ஐஸ்கிரீம் தானம்

நவநீதன் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதன்முறையாக வெசாக் பண்டிகை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பிரதேச செயலக நிர்வாகம் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது. பௌத்த மக்களால் உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படும் வெசாக் தினம், புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் புனித நாளாகக் கருதப்படுகிறது. கடந்த 05 ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன், நீண்ட […]

Read More

இயக்கம் தொடங்கி அரசியல் கட்சியாக்குவேன்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கூட்டும் வகையில், புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதனைப் பின்னர் அரசியல் கட்சியாக மாற்றவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் இதோ: தேதி: 05 ஜூன் 2026

Read More

குமுக்கனில் புதிய காளி அம்பாள் சிலை பிரதிஷ்டை – சைவா சமய பணியாளர்கள் ஏற்பாடு!!

(  வி.ரி.சகாதேவராஜா)  கிழக்கு மாகாணத்தின் தென்திசைஎல்லையான குமுக்கன் நதி தீரத்தில் பன்னெடுங்காலமாக எழுந்தருளி அருள் சாதித்துக் கொண்டிருக்கும் குமுக்கன் காளியம்மன் ஆலயத்திற்கு புதிய அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது. சைவா சமய அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்தது. ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உடைந்த நிலையில் காணப்பட்ட குமுக்கன் காளி அம்மன் திருச்சிலை, அம்மன் அருள்வாக்கின்படி சைவா சமய பணியாளர்கள் அமைப்பின் முன்னெடுப்பில் புதிய சிலையாக வடிவமைக்கப்பட்டு, கடந்த 2026.05.29 ஆம் திகதி புனிதமாக புனர்பிரதிஷ்டை செய்யப்பட்டது. […]

Read More

அஸ்-ஸுஹறா  வித்தியாலயத்தில்  சர்வதேச சூழல்   தினம் அனுஷ்டிப்பு

பாறுக் ஷிஹான்- சர்வதேச சூழல்   தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக    கல்முனை  அஸ்-ஸுஹறா  வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால்  பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் முதலில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலையில்  சிரமதான நிகழ்வுகள் முதலில்  இடம்பெற்றது. அதனை தொடர்ந்து  இன்று(05)அப்பாடசாலை அதிபர்   தலைமையில்   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள்    இடம்பெற்றதுடன் அவர்   பல்வேறு சூழல் சார் கருத்துக்களை வழங்கினார். இதன் போது இயற்கை […]

Read More

5000  பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் “சங்கமம்” நிகழ்வு ஜுன் 14 இல்..

( வி.ரி. சகாதேவராஜா)  இலங்கை வரலாற்றில் முதல் முறையாக  5000  பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் “சங்கமம் 2026” பரதநாட்டிய மகா உலக சாதனை நடன நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது. கின்னஸ் சாதனை படைப்பதற்காக சர்வதேச அளவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய  கலைஞர்கள் கலந்துகொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க பரதநாட்டிய மகா நடன பயிற்சி உலக சாதனை நிகழ்வான “சங்கமம் 2026”  நிகழ்வை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி […]

Read More