September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

நற்பிட்டிமுனை  அம்பலத்தடி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்  சனியன்று ஆரம்பம்

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர் நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகவுள்ளன. அதேவேளை, 19 ஆம் தேதி பத்தி முக்தி திருவிழாவும், 20ஆம் தேதி திருவேட்டைத் திருவிழாவும், 21 ஆம் தேதி சப்பரத் திருவிழாவும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, சங்காபிஷேகம்  எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நடைபெற […]

Read More

பனை வளம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு.

செல்லையா பேரின்பராசா  உலக பனை தினம் என பனை வள ஆர்வலர்கள் ஆண்டுதோறும்  யூன் 06 ஆம் நாள் கொண்டாடியதை ஒட்டி பனை வளம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 10.06.2026 புதன்கிழமை புதன்கிழமை காலை நடைபெற்றது. இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அச்சுவேலி பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்க முகாமையாளர் கிருஷ்ணன் வரதராஜா அதிதி பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். கோப்பாய் அரசினர் ஆசிரியர் […]

Read More

அமெரிக்க ஹெலிகொப்டர் விவகாரம்: ஈரான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64 அப்பாச்சி ஹெலிகொப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த “நியாயமற்ற ஈரானிய தாக்குதலுக்கு” பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தகவலின்படி, நேற்று (09) மாலை 17:00 EST (BST இரவு 22:00) மணியளவில் இந்த இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. “ஈரானின் அத்துமீறலுக்கு […]

Read More

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் மகோற்சவ தீமிதிப்பு வைபவம் ஆரம்பம் 

(வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவம் மற்றும்  தீமிதிப்பு வைபவம் இன்று புதன்கிழமை (10) காலை 8.10 மணியளவில் கடல்நீர் கொணர்ந்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது. ஆலயபிரதமபூசகர் கி.சரவணபவா தலைமையில் நடைபெறவுள்ள மகோற்சவம், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீமிதிப்புவைபவத்துடன்  நிறைவுபெறவுள்ளதென ஆலயதலைவர் கலாபூசணம் எஸ்..இராமநாதன் தெரிவித்தார். ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாற்குடபவனியும் , 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முத்துச்சப்பற ஊர்வலமும் […]

Read More

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா(84)இ உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்

Read More

ஆலய சடங்குகளின் போது கடல் தீர்த்தம் எடுத்து வருவது எதற்காக?விளக்குகிறார் வித்தகர் வி.ரி. சகாதேவராஜா

இந்துத் திருக்கோயில்களில் நடைபெறும் மகோற்சவங்கள், கும்பாபிஷேகங்கள் மற்றும் விசேட சடங்குகளின் போது கடல், ஆறு, குளம் அல்லது புனித நீர்நிலைகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வருவது ஒரு தொன்மையான சமய மரபாகும். குறிப்பாக கடற்கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள அம்மன், முருகன் மற்றும் சிவன் ஆலயங்களில் கடல் தீர்த்தம் எடுத்து வருதல் மிகுந்த பக்தி உணர்வுடனும் மரியாதையுடனும் மேற்கொள்ளப்படுகிறது. இன்று(10)  புதன்கிழமை காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு மகோற்சவம் கடல்நீர் எடுத்து வந்து கதவு […]

Read More

34 வருட கல்விச் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறும் கல்வியாளர் சாந்தகுமார்!

34 வருட கல்விச் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறும் கல்வியாளர் சாந்தகுமார்! கல்வித் துறையில் 34 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய கல்வியாளர் சாந்தகுமார் அவர்கள், இன்று (10.06.2026) தனது நீண்டகால கல்விச் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுகின்றார். ஆசிரிய ஆலோசகர் காராளசிங்கம் நேசரெத்தினம் அவர்களின் புதல்வரான சாந்தகுமார் அவர்கள், 1992 ஆம் ஆண்டு உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். அங்கு 2004 ஆம் ஆண்டு வரை மாணவர்களின் […]

Read More

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்க துரித நடவடிக்கை; உள்ளூராட்சி அமைச்சர் பணிப்புரை.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எல்லை நிர்ணயப் பணிகளை பூர்த்தி செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுக்குமாறு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரட்ன பணிப்புரை விடுத்துள்ளார். சாய்ந்தமருது நகர சபை தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் ஏற்பாட்டில் அவரது […]

Read More

காரைதீவு கோணேஸ்வரனுக்கு ராஜதந்திர ஜெயந்தி விருது!

(வி.ரி.சகாதேவராஜா) அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில், அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட “ராஜதந்திர ஜெயந்தி” விழாவில் காரைதீவைச் சேர்ந்த ரி.கோணேஸ்வரனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் அம்பாறை மாவட்ட பொருளாளரும், காரைதீவு பிரதேச செயலாளருமான ரி.கோணேஸ்வரன் ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தராவார். இந்த பாராட்டு விழா நிகழ்வு கொழும்பு டவர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது. ஓய்வூதியதாரர்களின் சமூகப் பங்களிப்பை […]

Read More

யாருக்காக இந்த புகைபிடித்த மங்கிய வீதி அறிவித்தல் பலகை?

யாருக்காக இந்த புகைபிடித்த மங்கிய வீதி அறிவித்தல் பலகை? வீதி அபிவிருத்தி அதிகாரசபை  கவனிக்குமா?  ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதான வீதியில் வெள்ளைப் பாலத்துக்கு அருகில் போடப்பட்டுள்ள வீதி திசை நிர்ணய அறிவிப்பு பலகை புகைபிடித்து மங்கிப் போய் உள்ளது. தூரத்தில் வரும்போதே துல்லியமாக தெரியவேண்டிய இவ் அறிவித்தல் பலகை, இவ்வாறு மங்கி காணப்படுவதால், அம்பாறை மற்றும் அக்கரைப்பற்றுக்கு எந்த திசையால் செல்வதென்பது சாரதிகளுக்கு தெளிவில்லாமல் உள்ளது. இதனால் நெடுந்தூரம் இருந்து வருகின்ற வாகன சாரதிகள் மற்றும் […]

Read More