September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பனை வளம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு.

பனை வளம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு.

செல்லையா பேரின்பராசா 

உலக பனை தினம் என பனை வள ஆர்வலர்கள் ஆண்டுதோறும்  யூன் 06 ஆம் நாள் கொண்டாடியதை ஒட்டி பனை வளம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 10.06.2026 புதன்கிழமை புதன்கிழமை காலை நடைபெற்றது.

இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அச்சுவேலி பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்க முகாமையாளர் கிருஷ்ணன் வரதராஜா அதிதி பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின்  அபிவிருத்தி உத்தியோகத்தர் பகீர்த்தனா சிவதர்ஷன் அதிதி பற்றிய அறிமுக உரையாற்றினார்.

தமிழ் இலக்கியங்களில் பனை என்ற பொருளில் ஆசிரிய மாணவி செல்வகுமாரி தியாகராஜா சிறப்புரையாற்றினார். ஆங்கில நெறி ஆசிரிய மாணவி கௌசிகா நிரோஜன் பனை வளம் குறித்த விழிப்புணர்வு காணொளியை தயாரித்து திரையிட்டமை சிறப்பம்சமாகும்.