சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேன்முறையீட்டுக் கடிதத்தை சவூதி அரேபிய மன்னரிடம் சமர்ப்பிக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று விரைவில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது.
சவூதி அரேபியாவிற்கு செல்லவுள்ள இக்குழுவில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் செல்லவுள்ளார் எனும் அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டிருந்தார்.