கதிர்காம பாதயாத்திரிகளுக்கு கடந்த 12 வருடங்களாக தொடர்ச்சியாக மருத்துவ முகாமினை முன்நின்று நடத்தி வரும் வைத்தியர் அ. லதாகரனுக்கு கதிர்காமம் கிரிவெஹெர ராஜமகா விகாரையின் பிரதம குரு (வணக்கத்திற்குரிய கொபவாக தம்மிந்த நாயக்க தேரர்) அவர்களும், ஆலய நிர்வாகமும் இணைந்து அவரது சேவையை பாராட்டி கௌரவித்துள்ளனர்.
இது பற்றி வைத்திய கலாநிதி அ.லதாகரன் அவர்கள் பெருமிதத்துடன்
இவ்வாறு கூறியுள்ளார்.
நாமும் பெருமை கொள்கிறோம்.
“என் வாழ்வின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று இன்று
கடந்த 12 வருடங்களாக கதிர்காமம் / கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்லும் யாத்திரியர்களுக்காக யால-2 பகுதியில் நாம் நடத்தி வரும் பாதயாத்திரை மருத்துவ முகாமிற்கு கிடைத்த சிறப்பு பாராட்டு இது!
கதிர்காமம் கிரிவெஹெர ராஜமகா விகாரையின் பிரதம குரு (வணக்கத்திற்குரிய கொபவாக தம்மிந்த நாயக்க தேரர்) அவர்களும், ஆலய நிர்வாகமும் எமது சேவையை பாராட்டி கௌரவித்தனர்!
எனது குழுவின் சார்பாக இந்த சிறப்பு பாராட்டை நான் பெற்றுக்கொண்டேன்!.
கல்முனை நெற் இணையக்குழு திறமையான செயற்பாடுகளை இனம் கண்டு பாராட்டியும், அவர்களின் சேவைகளை வெளிப்படுத்தியும் வருவது வழமையான செயற்பாடாகும்.
அந்த வகையில்
நாவலடியில் கதிர்காம பாத யாத்திரியர்களுக்கான பல் தேவைகளை (மருத்துவம் உட்பட) பூர்த்தி செய்யும் ஒரு விசேட வடிவமைப் கொண்ட முகமாக செயற்பட்டதையும். அதில் வைத்திய கலாநிதி அழகையா லதாகரன் ( கிழக்கு மாகாண சமூக வைத்திய மேம்பாட்டு நிபுணர்) அவர்களின் திறமைபற்றியும்
அந்த முகாமின் சிறப்பியல்பு பற்றியும்
இரு மொழிகளிலும் முதல்முதலாக களமுனையில் நெற் சிறப்பு கட்டுரையாக எமது இணைய பக்கத்தின் ஊடாக வெளிப்படுத்தி இருந்தது.







