September 27, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மற்றுமொரு இலஞ்சக் குற்றச்சாட்டு: சிறைச்சாலையில் நாமல் ராஜபக்ஷவிடம் விசாரணை

மற்றுமொரு இலஞ்சக் குற்றச்சாட்டு: சிறைச்சாலையில் நாமல் ராஜபக்ஷவிடம் விசாரணை

டிரான்ஸ்வொர்க் சதுக்க நில விவகாரம்: நாமல் ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு

கொழும்பு கோட்டை டிரான்ஸ்வொர்க் சதுக்க நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, கிரிஷ் (Krrish) தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவிடமிருந்து மூன்று சந்தர்ப்பங்களில் 70 மில்லியன் ரூபாய் (700 இலட்சம்) லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரமவின் உத்தரவுக்கு அமைய, வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்ற ஆணைக்குழு அதிகாரிகள் இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் விவகாரத்தில் 1,000 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பதிவாகியுள்ள இரண்டாவது முக்கிய லஞ்சக் குற்றச்சாட்டு இதுவாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *