September 25, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 47ஆவது வருடாந்த திருவிழா!

கல்முனை தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 47ஆவது வருடாந்த திருவிழா!

கல்முனை தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 47ஆவது வருடாந்த திருவிழா நேற்று (25) மாலை கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகியது.

“நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசுவா 24:15) என்ற இறைவார்த்தையை அடிப்படையாகக் கொண்டு இவ்வருட திருவிழா நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

திருவிழா கூட்டுத்திருப்பலி எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

கார்மேல் பற்றிமா கல்லூரி, தேசிய பாடசாலை, கல்முனையின் அதிபர் அருட்பணி. J. லெபோன் சுதன் (OMI) அடிகளாரின் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறவுள்ளது.

ஆலய திருவிழா நிகழ்வுகளில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *