September 25, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > பெரியநீலாவணை விஸ்ணு மகா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வுக்கு உதவும் பொற்கரங்கள் அன்பளிப்பு

பெரியநீலாவணை விஸ்ணு மகா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வுக்கு உதவும் பொற்கரங்கள் அன்பளிப்பு


பெரியநீலாவணை கமு/விஸ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள ஆசிரியர் தின நிகழ்வை சிறப்பாக முன்னெடுப்பதற்காக சமூகசேவகர் விசு கணபதிப்பிள்ளையின் , “உதவும் பொற்கரங்கள் அமைப்பு – கனடா”வினால் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


தமிழ்ப்பணிக்காகவும், சமூக சேவைக்காகவும் செயற்பட்டு வரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பு – கனடா, கல்வி மற்றும் பாடசாலை சமூகத்தின் தேவைகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றது.


அந்த வகையில், பெரியநீலாவணை கமு/விஸ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள ஆசிரியர் தின நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்வதற்குத் தேவையான உதவிகளை வழங்கும் நோக்கில் குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.


இதன்போது, அமைப்பின் இணைப்பாளர் திரு..ந.சௌவியதாசன்,ஆசிரிய ஆலோகர் திரு.கா.சாந்தகுமார் மற்றும் பாடசாலை பிரதி அதிபர் M.S.முசாபீர்,உதவி அதிபர் பி.பற்குணராஜா மற்றும் நிர்வாகத்தினர் கலந்து கொண்டு உதவியைப் பெற்றுக்கொண்டனர்.


ஆசிரியர்களின் சேவையை கௌரவிக்கும் இந்நிகழ்வுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உதவி, ஆசிரியர்களை மதிக்கும் சமூகத்தின் நல்லெண்ணத்தையும், கல்வி வளர்ச்சியில் புலம்பெயர் சமூக அமைப்புகளின் பங்களிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


கல்வி வளர்ச்சிக்கும், ஆசிரியர் சமூகத்திற்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பு – கனடாவுக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *