September 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மத்தியமுகாம் உஸ்வா அஹதிய்யா மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு மற்றும் கலாசார நிகழ்வு.

மத்தியமுகாம் உஸ்வா அஹதிய்யா மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு மற்றும் கலாசார நிகழ்வு.

(மின்மினி மின்ஹா)

அம்பாரை மாவட்டம் மத்தியமுகாம் பிரதேசத்தில் சிறப்பாக இயங்கிவரும் உஸ்வா அஹதிய்யா மாணவர்களின் வருடாந்த பரிகளிப்பு நிகழ்வு மற்றும் கலாசார நிகழ்வு மத்தியமுகாம் ஜீ.எம்.எம்.எஸ். பாடசுலை மண்டபத்தில் வெற்றிகரமாக (20) நடைபெற்றது.

உஸ்வா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் – அஷ்- ஷெய் கு எம். எம். தெளபீக் (இஸ்லாஹி, BA, JP, DO) தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் , அவர்களின் திறமைகளை பராட்டும் வண்ணம் புரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றன.

இவ்விழாவில் ஊர் பிரமுகர்கள், உலமாக்கள் , கல்வியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்திருந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *