(செல்வி வினாயகமூர்த்தி)
ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார அதிகாரசபையின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் 03ம்திகதி நடைபெறவுள்ள கவியரங்கிற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (22) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச நெசவு நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஓய்வூதியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கலாசார அதிகாரசபையின் பொதுக்கூட்டத்தின் போதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலாசார அதிகாரசபையின் உப தலைவர் வா. குணாளன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஒக்டோபர் முற்பகுதியில் நடைபெறவுள்ள கவியரங்கை சிறப்பாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள், நிகழ்ச்சி நிரல் மற்றும் பங்கேற்பாளர்கள் தொடர்பில் உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கலை மற்றும் இலக்கிய செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் உறுப்பினர்களால் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.