September 23, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் குற்றவாளிகளுக்கு15 பேருக்கு தலா 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் குற்றவாளிகளுக்கு15 பேருக்கு தலா 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை

உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய சிறப்பு நீதிபதிகள் ஆயம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கில், 15 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏனைய 9 பிரதிவாதிகளும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தண்டனை விதிக்கப்பட்ட 15 பேருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *