September 22, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > அனோஜன் விவகாரத்தில் யாரும் விளையாட வேண்டாம் – எதிர்க்கட்சித் தலைவர் தொலைபேசி உரையாடலை பகிரங்கப்படுத்தியது தவறானது

அனோஜன் விவகாரத்தில் யாரும் விளையாட வேண்டாம் – எதிர்க்கட்சித் தலைவர் தொலைபேசி உரையாடலை பகிரங்கப்படுத்தியது தவறானது

அனோஜன் விவகாரத்தில் யாரும் அவசரப்பட்டு செயற்படாமல், மிகவும் பொறுப்புடனும் நிதானமாகவும் அணுக வேண்டும். குறிப்பாக, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவரின் மனநிலையையும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சூழ்நிலையையும் முதலில் புரிந்துகொள்வது அவசியமாகும்.

சவூதி அரேபியாவின் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவே அனோஜனுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முக்கியமான தருணத்தில் இலங்கை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இராஜதந்திர ரீதியிலான கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்கள் ஊடாக அவரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும்.

அதேவேளை, இந்த விவகாரத்தை அரசியல் ரீதியான போராட்டங்களுக்கோ அல்லது தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கோ கொண்டு செல்வது நிலைமையில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், அனோஜனுக்கு ஆதரவளிப்பதாகக் கூறிக்கொண்டு அவருக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு மேலதிக நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அனைவரிடமும் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், உணர்ச்சிவசப்படுவதை விட பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்பட்டு, அனோஜனை பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பதே முக்கியமானதாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *