September 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கவிஞர்.சிவ வரதராஜனின் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ நூல் வெளியீடு சிறப்பாக நடந்தேறியது.

கவிஞர்.சிவ வரதராஜனின் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ நூல் வெளியீடு சிறப்பாக நடந்தேறியது.

(செல்லையா பேரின்பராசா – சௌவியதாசன்)

கல்முனை பாண்டிருப்புபைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிஞர் சிவ வரதராஜன் எழுதிய ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு 12.09.2026 சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் சிறப்பாக நடந்தேறியது.

உலக எழுத்தாளர் தமிழ்மணி உமா வரதராஜன் தலைமையில்
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில்வெகு சிறப்பாக நடைபெற்றத
இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம் எஸ் ஸஹதுல் நஜீம் கலந்து சிறப்த்தனர்.

முதற் பிரதி நூலாசிரியரின் தாயாரான திருமதி தங்கப்பாக்கியம் சிவனடியான் அவர்களும் அடுத்த பிரதியை பிரபல சமூக செயற்பாட்டாளர் க.பிரகலதன் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் , கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் க. லிங்கேஸ்வரன், , கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, டாக்டர். நடராசா ரமேஷ், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் செல்லத்தம்பி கலையரசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ் விழாவில் இந் நூல் பற்றிய மதிப்புரைகளை கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் சி. ஜெயசங்கர்,சிரேஷ்ட கவிஞர் சோலைக்கிளி, டாக்டர். புஷ்பலதா லோகநாதன் (கவிதாயினி மலரா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வு நிலை பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந் நூல் பற்றிய அறிமுகவுரையை தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளரரும் இலக்கியவியலாளருமான சஞ்சீவி சிவகுமார் நிகழ்த்தினார்.

இந் நூல் வெளியீட்டி விழாவில் மண்டபம் நிறைய பெரும் எண்ணிக்கையிலான இலக்கியவியலாளர்கள், கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *