September 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது!

கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது!

கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டி 11.09.2026ம் திகதி வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டி செப்டம்பர் 11ஆம் திகதி
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்தும் 45வது தேசிய இளைஞர் விருது வழங்கல் போட்டி – 2026 இன் கீழ், கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டியின் அறிவிப்பாளர், பேச்சு போட்டிகள் இடம் பெற்றன.

இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, அவர்களிடையே மறைந்துள்ள ஆற்றல்களை அடையாளம் காண்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமையவுள்ளது.

“இளைஞர்களின் திறமைகளுக்கான ஒரு தேடல்…” என்ற நோக்குடன் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வில் இளைஞர்கள் பங்கேற்று தமது ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *