அரவிந்தன்
சமுர்த்தி “ரண்விமன” வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள், கல்முனை வடக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் நிர்வாக உத்தியோகத்தர் எம். ஜீவராஜ் அவர்களினால் இன்று (02) பெரியநீலாவணை–01 மற்றும் கல்முனை–01C பிரிவுகளில் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ். ஸ்ரீநாதன், சமுர்த்தி முகாமையாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், வலய உதவியாளர்கள், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி தலைவர்கள் மற்றும் சங்கத் தலைவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
வீடமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளின் குடும்ப நலனை கருத்திற்கொண்டு, இந்நிகழ்வின்போது தலா ரூ.10,000 பெறுமதியான உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சமுர்த்தி “ரண்விமன” வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக தேவையுடைய குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான வீடுகளை பெற்றுக்கொடுப்பதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான சமூக நலத்திட்டங்கள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



