September 21, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை வைத்தியசாலை வீதியில் அசுத்தக் கழிவுகளை வீசும் பொறுப்பற்ற மனிதர்கள்.

கல்முனை வைத்தியசாலை வீதியில் அசுத்தக் கழிவுகளை வீசும் பொறுப்பற்ற மனிதர்கள்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வீதி, அதன் குறுக்கு வீதிகள், (குறிப்பாக முதலாம் குறுக்கு) போன்ற இடங்களில் அடையாளம் தெரியாத பொறுப்பற்ற மனிதர்கள் தங்கள் வீட்டின் குப்பைகள், நாற்றமெடுக்கும் பம்பஸ்கள் என கெட்ட கழிவுகளை எங்கிருந்தோ கொண்டுவந்து போட்டுச் செல்கின்றனர்.

இது வைத்தியசாலைச் சூழல் என்பதுடன் இந்த வீதியால் தினமும் மாணவர்கள், உட்பட பலநூறு பாதசாரிகள் பயணிக்கின்றார்கள். இவ் வீதியில் இவ்வாறு விசமிகளால் எறியப்படும் கழிவுப் பொதிகளை தெருநாய்கள் கடித்திழுத்து வீதியெங்கும் பரப்பி விடுகின்றன.

இதனால், அவ் வீதியில் துர்நாற்றம் வீசுவதோடு, பாதசாரிகளுக்கு அசௌகரியங்களையும் ஏற்படுத்துகின்றது என அத்தெருவில் வசிப்பவர்களும் பாதசாரிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.

அவ் வீதியால் செல்லும் மாநகர சபை குப்பை வண்டிகள் கூட இவற்றை எடுத்துச் செல்வதில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றன. எனவே, இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்களை கேருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *