September 18, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > தம்பட்டையில் “சீ தமிழ்” வர்ஜாவுக்கு கௌரவம்! 

தம்பட்டையில் “சீ தமிழ்” வர்ஜாவுக்கு கௌரவம்! 

( தம்பட்டையிலிருந்து வேதசகா)

இந்திய சீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா  நிகழ்ச்சி புகழ் இலங்கை திருமலை இளம் பாடகி வர்ஜாவிற்கு நேற்று (18) நள்ளிரவில் அம்பாறை மாவட்டம் தம்பட்டையில் பகிரங்க கௌரவம் அளிக்கப்பட்டது.

தம்பட்டை ஆறுமுக சுவாமி ஆலயத்தின் சங்காபிஷேகத்தையொட்டி,   ஏற்பாடு செய்த கல்முனை “சாகரம்” இசைக் குழுவினரின் “இன்னிசை விருந்து” நள்ளிரவு 12 மணிவரை   தப்பட்டை கடற்கரையில் கோலாகலமாக இடம் பெற்றது.

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இரவு நள்ளிரவு 12 மணி வரை குழுமியிருந்து அறிவிப்பாளர் காரைதீவு ரிஷியின் அறிவிப்பில் இடம்பெற்ற இந்த இசை நிகழ்வில், பாடல்கள் பலவற்றை பாடிய இளம் பாடகி வர்ஜாவிக்கு மேடையில் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கல்முனை”சாகரம்” இசைக் குழுவின் தலைவர் நெல்சன் ஜோன்,  மூத்த பாடகர் பி .கே .சேகர் , பாடகர் வி. மோகன் ஆகியோருடன் காரைதீவின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் பிரபல ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா  ஆகியோர் முன்னிலையில் இம் மகத்தான கௌரவம் ரசிகர்களின் கரவோசை மத்தியில் அளிக்கப்பட்டது .

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *