2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் தொடரப்பட்டுள்ள பிரதான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி காலை 9.00 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
கொழும்பு நிரந்தர திரிபுடை மேல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஷாங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய குழாமினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சதித்திட்டம் தீட்டியமை, தாக்குதல்களுக்கு உதவியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரதிவாதிகள் தரப்பின் எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், நீண்டகாலமாக விசாரணையில் இருந்த இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
