இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்தும் 45வது தேசிய இளைஞர் விருது வழங்கல் போட்டி – 2026 இன் கீழ், கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டி நடைபெறவுள்ளது.
இதன்படி, அறிவிப்பாளர் மற்றும் பேச்சுப் போட்டிகள் எதிர்வரும் 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு, கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, அவர்களிடையே மறைந்துள்ள ஆற்றல்களை அடையாளம் காண்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமையவுள்ளது.
“இளைஞர்களின் திறமைகளுக்கான ஒரு தேடல்…” என்ற நோக்குடன் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வில் திறமையுள்ள இளைஞர்கள் பங்கேற்று தமது ஆற்றல்களை வெளிப்படுத்தவுள்ளனர்.
