September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > வெற்றி நியூஸ் ஊடக பிரதானி தனோஷனின் தந்தை நண்பர் சிவாவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!

வெற்றி நியூஸ் ஊடக பிரதானி தனோஷனின் தந்தை நண்பர் சிவாவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!

வெற்றி நியூஸ் ஊடக பிரதானி தம்பி தனோஷனின் தந்தை ஓய்வுபெற்ற கலால் திணைக்கள உத்தியோகத்தர் நண்பர் கந்தையா சிவானந்தம்( 61) ,
ஜெயகலா(சிரேஸ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் மாவட்ட மீன்பிடி திணைக்களம் கல்முனை ) அவர்களின் கணவராவார்.

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் மறைந்த திரு.கிருஷ்ணபிள்ளை அவர்களின் மருமகனும் , பிரபல வைத்தியர் கண்ணகை அம்மன் ஆலய முன்னாள் தர்மகர்த்தா மறைந்த டாக்டர் பரமானந்தம் அவர்களின் சகோதரருமான சிவாவிற்கு, Dr. டிவானிக்கா (ஆதார வைத்தியசாலை கல்முனை), தனோஷன் (தகவல் தொழில்நுட்ப பீடம், வவுனியா பல்கலைக்கழகம்) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

அவரது தகனக்கிரியை இன்று மாலை காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.முன்னதாக இன்று புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரது வீட்டில் ஈமக்கிரியைகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஊடகர் சகா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *