September 16, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ விழா ; 5ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ விழா ; 5ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

கல்முனை , நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ கணேசர் தேவஸ்தானத்தின் வருடாந்த பிரம்மோற்சவ விழா எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.35 மணி முதல் 12.00 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

ஆவணி மாதம் 19ஆம் நாள் நடைபெறும் இக்கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. விழாவின் தீர்த்தோற்சவம் செப்டம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறும்.

விழாக்காலங்களில் தினமும் காலை 6.45 மணிக்கும் மாலை 5.00 மணிக்கும் உற்சவங்கள் ஆரம்பமாகும். மேலும், பல்வேறு மாம்பழத் திருவிழா, வேட்டைத் திருவிழா, சப்பரத் திருவிழா, தேர்த்திருவிழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திரு விழாக்கள் இடம்பெறும்.


செப்டம்பர் 14ஆம் திகதி நடைபெறும் தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு காலை தீர்த்தோற்சவம், பகல் அன்னதானம் மற்றும் கொடியிறக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. மாலை 6.00 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், இரவு 7.00 மணிக்கு வைரவர் பூஜையும் நடைபெறும்.

நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் நடைபெறும் இவ்வருடாந்த பிரம்மோற்சவ விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ கணேசப் பெருமானின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *