( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் இன்று (4) புதன்கிழமை பதவியேற்றார்.
முன்னதாக அவர் மேளதாளம் சகிதம் வரவேற்கப்பட்டார்.
அவருடன் கல்முனை ஆதார வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மருத்துவர் பி.சிறிசங்கர் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் கே.சத்தியமூர்த்தியும் கலந்து கொண்டமை சிறப்பானது.
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ துறை பேராசிரியர் மகப்பேற்று நிபுணர் மருத்துவர் எம்.திருக்குமார் உள்ளிட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதேவேளை மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன் கலந்து சிறப்பித்தார்.
கூடவே கடமைப் பொறுப்பேற்பும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிரந்தர பணிப்பாளர் நியமிக்கும்வரை பதில் பணிப்பாளராக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரார் மருத்துவர் இரா.முரளீஸ்வரன், நான்கு மாதங்கள் பதில் கடமையாற்றி இருந்தார்.
சுகாதார நிருவாக சேவையில் 15வருட காலம் அனுபவமுள்ள மருத்துவர் குண.சுகுணன் முதலில் களவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளராக, வவுனியா ஆதார வைத்தியசாலை பணிப்பாளராக, இறுதியாக கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது