பாறுக் ஷிஹான்
கலவன், கீரி மற்றும் சீலா மீன்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்லக் குவியும் பொதுமக்கள்!
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரைவலை மீன்பிடியில் மிகக் கூடுதலான அளவில் மீன்கள் சிக்கியுள்ளதன் காரணமாக, பெண்கள் சந்தையில் கலவன் மீன் உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகள் மிக மலிவான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இன்றைய தினத்தில் மீனவர்களின் வலையில் பெருமளவில் மீன்கள் சிக்கியுள்ளமையால், உள்ளூர் மீன் சந்தையில் நுகர்வோருக்கான விலைகள் சடுதியாகக் குறைந்துள்ளன. இதன் அடிப்படையில் சந்தையில் நிலவும் மீன்களின் விலை நிலவரங்கள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:
கலவன் மீன் 3 கிலோ வெறும் 500 ரூபாவிற்கும் கீரி மீன் 1 கிலோ 200 ரூபாவிற்கும் சீலா மீன் 1½ கிலோ 500 ரூபாவிற்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
வழக்கத்தை விட மிகக் குறைந்த விலையில் தரமான மீன்கள் சந்தையில் கிடைப்பதால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது.

