November 24, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

மண்டூர் முருகனாலயத்தில் இருந்து வெருகல் முருகனாலயத்திற்கு பாதயாத்திரை – ஏற்பாடு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் வருடாந்தம் நடாத்தப்படும் இந்து சமய ஆன்மீக பாதயாத்திரை பாதயாத்திரை 23.09.2026 மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகி 29.09.2026 வெருகலம்பதி சித்திர வேலாயுதர் ஆலயம் வரை சென்றடையும். நாளாந்த விபரம்: யாத்திரையானது 2026.09.29 மாலை வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையும். அனைத்து இந்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்!

Read More

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி 2004 கலைப்பிரிவு மாணவர்களால் ஆசிரியர்கள் கௌரவிப்பு: பாடசாலைக்கு கட்டடக் கூரை அன்பளிப்பு

– பியந்த – அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் 2004ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்களால் தமக்குக் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (19.09.2026) கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. “அறிவை விதைத்து அறிவொளி ஏற்றும் ஆசான்களை வாழும் போதே வாழ்த்துவோம்” என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பாடசாலையின் பிரதான நுழைவாயிலிலிருந்து பேண்ட் வாத்திய இசையுடன் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை மற்றும் சிறப்புரைகள் […]

Read More

கல்முனை வைத்தியசாலை வீதியில் அசுத்தக் கழிவுகளை வீசும் பொறுப்பற்ற மனிதர்கள்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வீதி, அதன் குறுக்கு வீதிகள், (குறிப்பாக முதலாம் குறுக்கு) போன்ற இடங்களில் அடையாளம் தெரியாத பொறுப்பற்ற மனிதர்கள் தங்கள் வீட்டின் குப்பைகள், நாற்றமெடுக்கும் பம்பஸ்கள் என கெட்ட கழிவுகளை எங்கிருந்தோ கொண்டுவந்து போட்டுச் செல்கின்றனர். இது வைத்தியசாலைச் சூழல் என்பதுடன் இந்த வீதியால் தினமும் மாணவர்கள், உட்பட பலநூறு பாதசாரிகள் பயணிக்கின்றார்கள். இவ் வீதியில் இவ்வாறு விசமிகளால் எறியப்படும் கழிவுப் பொதிகளை தெருநாய்கள் கடித்திழுத்து வீதியெங்கும் பரப்பி விடுகின்றன. இதனால், அவ் […]

Read More

இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு பயணத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் சிறப்பு ஆன்மிக நிகழ்வு.

(செல்வி வினாயகமூர்த்தி) இலங்கையில் இராமகிருஷ்ண மிஷன் தனது நூற்றாண்டு கால ஆன்மிக, கல்வி மற்றும் சமூக சேவைப் பயணத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அதன் நூற்றாண்டு பயணத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் கிரகசாந்தி பிரார்த்தனை, சிறப்பு யாக பூஜை மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில், அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, சமூக ஒழுக்கத்தை மேம்படுத்துவதுடன் மாணவர்களிடையே அறநெறிக் கல்வி மற்றும் ஆன்மிக […]

Read More

கல்முனை றோட்டரி கழகத்தின் 27 வது புதிய தலைவராக திருநாவுக்கரசு பதவியேற்பு

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை றோட்டரி கழகத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக ரொட்டேரியன். இரா. திருநாவுக்கரசு நேற்று  (19) காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகபதவியேற்றார். இப் பதவியேற்பு நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைதீவு றோட்டரி மாவட்டம் 3220 இன் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன். குமார் சுந்தரராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய தலைவரின் பதவியேற்பை சிறப்பித்தார். கல்முனை ரோட்டரிக் கழகத்தின் தலைவர் ரொட்டேரியன் எஸ். தரணிதரன் தலைமையில் பதவியேற்பு […]

Read More

உள்ளூராட்சி வார கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சாம்பியனானது அக்கரைப்பற்று மாநகர சபை அணி – இரண்டாமிடம் பெற்றது கல்முனை மாநகர சபை.!

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை உள்ளுராட்சி மன்றங்களுக்கு இடையிலான லீக் முறையிலான மின்னொளி கிரிக்கெட் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று மாநகர சபை, கல்முனை மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகிய அணிகள் பங்குபற்றியிருந்தன. இத்தொடரிலே இறுதிப் போட்டிக்கு அக்கரைப்பற்று மாநகர சபை அணியும், கல்முனை மாநகர சபை அணியும் தெரிவு செய்யப்பட்ட நிலையில் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று […]

Read More

தண்டனை பெற்றோர் பரிமாற்றம், பரஸ்பர சட்ட உதவி: இலங்கை – சவூதி பேச்சுவார்த்தை

இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கிடையில் தண்டனை பெற்ற நபர்களை பரிமாறிக்கொள்வது மற்றும் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவாக இறுதி செய்வது குறித்து முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், சவூதி நீதியமைச்சின் சட்டங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மிஷால் பின் அலி அல்-பலாவியை ரியாத்தில் உள்ள நீதியமைச்சில் சந்தித்துள்ளார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீதித்துறை மற்றும் சட்டத்துறை சார்ந்த […]

Read More

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 218வது வருடாந்த திருவிழா

அம்பாறை மாவட்டத்தின் புகழ்பெற்றதும் பழமை வாய்ந்ததுமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 218வது வருடாந்த திருவிழா 20.09.2026 க.டினேஸ் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் திருவிழா திருப்பலியானது 20.09.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:15 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி ஜினோ சுலக்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. கடந்த 9 நாட்கள் மாலை வழிபாடுகள் இறைமக்களை தயார்படுத்தும் வண்ணம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தியதாக இறைமக்களுக்கு சிந்தனைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சனிக்கிழமை மாலை வேஸ்பர் நற்கருணை […]

Read More

இன்றும் (20) அனோஜனுடன் தொடர்பை ஏற்படுத்திய சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந்

சவுதியில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள அனுஜனின் விடுதலை தொடர்பில் அதிக கரிச்சினையோடு செயற்பட்டு வரும் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவரான ரஜிவ்காந் அனோஜனோடு இன்று தொலைபேசியில் பேசிய பின்னர் அவர் வெளியிட்டுள்ள பதிவு மிகவும் பொறுப்போடு அனைவர்க்கும் அறியத்தருகின்றேன். இன்று காலை 10.30 மணி அளவில் அனோஜனின் குடும்பத்தை சந்தித்தேன். அப்பொழுது அனோஜனின் தம்பி ஹம்சிதனுக்கு சவுதியில் இருந்து அனோஜனின் அழைப்பு வந்தது. நான் அனோஜனிடம் 10 நிமிடங்கள் பேசினேன். இறுதியாக ஜூன் 30ம் திகதி அவர் […]

Read More

அனோஜனுக்காக வளத்தாப்பிட்டியில் ஒன்று கூடி மக்கள் பிரார்த்தனை!

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி மக்கள் தீபமேந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன், விடுதலைக்கான மகஜரிலும் கையொப்பமிட்டு வருகின்றனர். சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, சம்மாந்துறை பிரதேசத்தின் வளத்தாப்பிட்டி பகுதியில் இன்று மக்கள் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதன்போது மக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், அவருக்கு மன்னிப்பு கிடைக்கவும் பிரார்த்தனை செய்ததுடன், அவரது விடுதலையை வலியுறுத்தும் மகஜருக்கான […]

Read More