September 15, 2026

Blog Post

Kalmunai Net > 2026

மூளைக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு : – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தெனியாய பகுதியில் சில பாடசாலைகளில் முதலில் பதிவான மூளைக்காய்ச்சல் நோய் தற்போது நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தியத்தலாவ பகுதியில் 28 பேரும், வெலிமடை பகுதியில் 13 பேரும், ரிகில்லகஸ்கட பகுதியில் 25 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் நோய் பரவி வருவதாகவும், […]

Read More

சமூக ஊடக நிதி மோசடிகள் குறித்து பொலிஸ் எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக அதிகரித்து வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. டெலிகிராம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி போலி லொத்தர் பரிசுகள், உடனடி கடன் வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதாக கூறி பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிமுகமில்லாத இணைப்புகளை திறப்பது, பலவீனமான கடவுச்சொற்களை பயன்படுத்துவது மற்றும் வங்கி தொடர்பான தனிப்பட்ட தகவல்களை பிறருடன் […]

Read More

பொத்துவில் கனகர் கிராமத்தில் பொதுக்கிணறு மக்கள் பாவனைக்கு கையளிப்பு : கனடா வெஸ்டன் தமிழர் சங்கம் நிதியுதவி!

​பொத்துவில்: பொத்துவில் மீள்குடியேற்ற கிராமமான கனகர் கிராமத்தில், அங்கு வாழும் மக்களின் மிக அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான குடிநீர் கிணறு ஒன்று உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. ‘வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா’ அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இக் கிணறு, இன்று (23.05.2026) திறந்து வைக்கப்பட்டது. ​பொத்துவில் கனகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. S. செல்வகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், கனகர் கிராமத்துக்குப் பொறுப்பான கிராம சேவையாளர் திரு. T. ராஜேந்திரன், […]

Read More

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்த கலை மன்றத்தின் 24 ஆவது வருட தமிழ் திறன் போட்டிகள்

(  வி.ரி.சகாதேவராஜா) கனடா சுவாமி விபுலாநந்தர் கலைமன்றம்  தனது 24 வது வருடாந்த தமிழ்த்திறன் போட்டிகளை கடந்த 17 ஆம் திகதி ஸ்காபரோ சிவிக் நிலையத்தில் தலைவர் சுதேசன் பத்மநாதன்  தலைமையில் நடாத்தியது. வழமைக்கு மாறாக இம் முறை அதிகூடிய 138 மாணவர்கள் இப் போட்டியில் பங்கேற்றமை  ஒரு சாதனையாகும். பேச்சு, திருக்குறள், பண்ணிசை, ஆத்திச்சூடி ,கொன்றை வேந்தன்,  சொல்வதெழுதுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.  இந்த வரலாறு படைத்த போட்டி நிகழ்ச்சியில்  பங்கு பற்றிச் சிறப்பித்து வெற்றி […]

Read More

கனகர் கிராம காணி விடுவிப்பு தொடர்பில் சட்டத்தரணி சுமந்திரனுடன் மக்கள் சந்திப்பு 

(வி.ரி.சகாதேவராஜா) பொத்துவில் கனகர் கிராம காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுடன் கல்முனையில் கனகர் கிராம மக்கள் சந்திப்பை மேற்கொண்டனர். ஜனாதிபதி மட்டு விஜயத்தோடு ஒட்டியதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும்  ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன்  அம்பாறை மாவட்டத்திற்கும் விஜயம் செய்திருந்தார். பொத்துவில் கனகர் கிராம மக்களின் காணி முழுமையாக விடுவிப்பு செய்யப்படாமல் இருப்பது தொடர்பில் கனகர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கல்முனையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.  அது தொடர்பில் சட்டநடவடிக்கைகள் எடுப்பது […]

Read More

கல்முனை – இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up”  கடற்கரையில் மாபெரும் சிரமதானம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர பிரதேசங்கள் உட்பட சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர்  ‘அழகான கடற்கரை’ செயற்றிட்டம் Clean srilanka  வேலைத்திட்டத்தின் ஊடாக  வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டத்தின் ஓர் அங்கமாக ‘அழகான கடற்கரை’ எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் விசேட வேலைத் திட்டம் இலங்கை இராணுவத்தின்  18வது விஜயபாகு காலாட்படையணி  ஏற்பாட்டில்  இன்று   காலை  7.30 மணி […]

Read More

இன்று யாழ்- கதிர்காம நீண்ட பாதயாத்திரை ஆரம்பம்!

இன்று யாழ்- கதிர்காம நீண்ட பாதயாத்திரை ஆரம்பம்! இலங்கையின் மிக நீண்ட புனித யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி – கதிர்காம பாதயாத்திரை இன்று சனிக்கிழமை காலை [2026.05.23] யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான போது… படங்கள். வி.ரி.சகாதேவராஜா

Read More

கல்முனை மாநகர சபையில்சேவை நலன் பாராட்டு விழா

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி, இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வுபெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று வியாழக்கிழமை (21) மாலை, மாநகர சபை கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்முனை மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் சுப்ரமணியம் சுபராஜன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் […]

Read More

கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வரவேற்பு விழாவும் கௌரவிப்பு விழாவும் 

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்தியசாலைக் குழுவின் ஏற்பாட்டில்,புதிதாக வைத்தியசாலையில்  பிரதிப் பணிப்பாளராக கடமையேற்ற மருத்துவர் பொன்னுச்சாமி ஸ்ரீ சங்கர் மற்றும் மகத்தான சீரிய சேவையாற்றிவரும்  பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் மற்றும் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மருத்துவர் சாமித்தம்பி ராஜேந்திரா ஆகியோருக்கு வரவேற்பு விழாவும்  கௌரவிப்பு விழாவும் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு வைத்தியசாலை குழுத் தவிசாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான  சந்திரசேகரன் ராஜன் தலைமையில் இன்று (22) வெள்ளிக்கிழமை […]

Read More

எம் கே.சிவாஜிலிங்கம் அவர்களுக்கு பெருந்தொகை நன்கொடை : உடன் முடிவெடுத்த ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா.!

யாழ்மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசிய பற்றாளருமான எம் கே சிவாஜிலிங்கம் அவர்களின் உடல் நிலை சிகிச்சையான சிறுநீரக மாற்றுச்சிகிகிச்சைக்காக ரூபா 70, இலட்சம் தேவை எனவும் விரும்பியவர்கள் அன்பளிப்பு செய்யுமாறும் சிவாஜிலிங்கம் அண்ணர் சமூக வலைத்தளங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை கருத்தில் எடுத்து ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழத்தேசிய கொள்கை பற்றாளருமான எமது மதிப்புக்குரிய கே.வி. தவராசா அவர்களின் கவனத்திற்கு இன்று காலையில் இதனை தெரியப்படுத்தினேன். அதனை மனப்பூர்வமாக ஏற்று “கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த […]

Read More