September 19, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > “அத்தம” தேசிய தூய்மைத் தினம்! திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது!

“அத்தம” தேசிய தூய்மைத் தினம்! திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது!

“அத்தம” தேசிய தூய்மைத் தினம்! திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது!

​”கிளீன் சிறிலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணியாக முன்னெடுக்கப்பட்ட “அத்தம” தேசிய தூய்மைத் தினத்தின் திருக்கோவில் பிரதேசத்திற்கான இரண்டாவது பிரதான நிகழ்வு,  திருக்கோவில் ~02 மற்றும் விநாயகபுரம்~04 ,விநாயகபுரம்~01 ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இனைந்த வகையில் இன்றைய தினம்  பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்  திருமதி.அனோஜா உஷாந்த் ,, கிராம  நிர்வாக உத்தியோகத்தர் திரு.A.மனோகரன் ,முப்படை பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், திருக்கோவில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,சுகாதார வைத்தி அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம சேவகர் பிரிவுகளின் பிரஜாசக்தி தவிசாளர்கள் பொதுமக்கள் என பலரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இத்தினத்தில் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள 22 கிராம சேவகர் பிரிவுகளிலும் பல்வேறுபட்ட சிரமதானப் பணிகள் மற்றும் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணிகள் என்பனவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *